"பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க 1) வெள்ளிவீதியார் - அ) புறநானூறு 2) அண்ணாமலையார் - ஆ) சி.சு. செல்லப்பா 3) வாடிவாசல் - இ) குறுந்தொகை 4) இளம்பெருவழுதி - ஈ) காவடிச்சிந்து 1) அ ஆ இ ஈ 2) ஆ ஈ அ இ 3) இ ஈ ஆ அ 4) இ ஈ அ ஆ"
Answers
Answered by
4
இ ஈ ஆ அ
வெள்ளி வீதியார்
- நம் பாடப்பகுதியில் உள்ள குறுந்தொகை பாடலை இயற்றிய வெள்ளி வீதியார் சங்ககால பெண்பால் புலவர்களில் ஒருவர் ஆவார்.
- இவர் சங்கத்தொகை நூல்களுள் 13 பாடல்களை பாடியுள்ளார்.
அண்ணாமலையார்
- அருணகிரிநாதரின் திருப்புகழ்த் தாக்கத்தினால் சென்னிகுளம் அண்ணாமலையார் அவர்களால் எழுதப்பட்ட சிறந்த சந்த இலக்கியம் காவடிச் சிந்து ஆகும்.
வாடிவாசல்
- நம் பாடப்பகுதியில் உள்ள வாடிவாசல் என்ற துணைப்பாடத்தின் ஆசிரியர் சி.சு. செல்லப்பா ஆவார்.
- இவர் 2001 ஆம் ஆண்டு சுதந்திர தாகம் என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
இளம்பெருவழுதி
- பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூற்றில் ஒரு பாடலும், பரிபாடலில் ஒரு பாடலும் இயற்றியுள்ளார்.
Similar questions