பொருந்தாத ஒன்றைக் கண்டறிக. அ) தனித்தமிழ்த் தந்தை - 1. மு. வரதராசனார் ஆ) ஆராய்ச்சிப் பேரறிஞர் - 2. மயிலை சீனி. வேங்கடசாமி இ) தமிழ்த் தென்றல் - 3. திரு. வி.க. ஈ) மொழி ஞாயிறு - 4.தேவநேயப் பாவாணர்
Answers
Answered by
0
தனித்தமிழ்த் தந்தை - மு. வரதராசனார்
தனித்தமிழ்த் தந்தை - மறைமலை அடிகள்
- தனித்தமிழ்த் தந்தை என அழைக்கப்பட்டவர் மறைமலை அடிகள் ஆகும்.
ஆராய்ச்சிப் பேரறிஞர் - மயிலை சீனி. வேங்கடசாமி
- சென்னை கோகலே மண்டபத்தில், அறிஞர்கள் பலர் கூடி மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களுக்கு மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற பட்டத்தினை வழங்கினர்.
தமிழ்த் தென்றல் - திரு. வி.க.
- திரு. வி. கல்யாண சுந்தரனார் அவர்களின் தமிழ்நடை சிறப்பின் காரணமாக தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுகிறார்.
மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
- பாவலேறு பெருஞ்சித்தரனார் அவர்கள் தேவநேயப் பாவாணரின் ஒப்பரிய தமிழறிவு மற்றும் பன்மொழியியல் அறிவினை கருதி அவரை மொழி ஞாயிறு என அழைத்தார்.
Similar questions