"கீழ்வருவனவற்றைப் பொருத்துக. 1. பாம்பிக்ஸ் மோரி - சாம்பா - முகா 2. ஆந்ரேயா அஸ்ஸமென்சிஸ் - மல்பெரி - எரி 3. ஆந்ரேயா மைலிட்டா - அர்ஜுன் - டஸ்ஸார் 4. அட்டாகஸ் ரிசினி - ஆமணுக்கு - மல்பெரி "
Answers
பட்டுவளர்ப்பு (Sericulture, அல்லது silk farming) என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும். பட்டு தயாரிப்பிற்கு பல சிற்றினப் புழுக்களை இருந்தாலும் கம்பளிப்புழு இனமான பொம்பெக்ஸ் மொரியே (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு செய்தாகக் கருதப்படுகிறது. பட்டு வளர்ப்பு என்பது பிரேசில், சீனம், பிரான்சு, இந்தியா, இத்தாலி, யப்பான், கொரியா, மற்றும் உருசியா உள்ளிட்ட நாடுகளில் முக்கியக் குடிசைத் தொழிலாக உள்ளது. இன்று உலகப் பட்டு தயாரிப்பில் 60% இந்தியாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்படுகிறது.
எந்த உயிரினத்தையும் வதைக்காமல் அகிம்சை வழியில் கூட்டுப்புழுக்களை வேக வைக்காமல் பட்டெடுத்து அகிம்சைப் பட்டு உற்பத்தியைச் செய்ய காந்தி வலியுறுத்தினார்.[1][2][3] பல சமூக அமைப்புகளும் கூட்டுப்புழுவை வேகவைப்பதை எதிர்க்கின்றனர். 21 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் என்கிற அமைப்பு பட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது.[4]
Explanation:
Hope it will help you
பொருத்துதல்
பாம்பிக்ஸ் மோரி-மல்பெரி-மல்பெரி
- பாம்பிக்ஸ் மோரி என்ற பட்டுப்பூச்சி இனத்தின் உணவு மல்பெரி இலை ஆகும்.
- இவற்றினால் உருவாகும் பட்டு மல்பெரி பட்டு என அழைக்கப்படுகிறது.
ஆந்ரேயா அஸ்ஸமென்சிஸ்-சாம்பா-முகா
- ஆந்ரேயா அஸ்ஸமென்சிஸ் என்ற பட்டுப்பூச்சி இனத்தின் உணவு சம்பா இலை ஆகும்.
- இவற்றினால் உருவாகும் பட்டு முகா பட்டு என அழைக்கப்படுகிறது.
ஆந்ரேயா மைலிட்டா-அர்ஜுன்-டஸ்ஸார்
- ஆந்ரேயா மைலிட்டா என்ற பட்டுப்பூச்சி இனத்தின் உணவு அர்ஜுன் இலை ஆகும்.
- இவற்றினால் உருவாகும் பட்டு டஸர் பட்டு என அழைக்கப்படுகிறது.
அட்டாகஸ் ரிசினி-ஆமணுக்கு-எரி
- அட்டாகஸ் ரிசினி என்ற பட்டுப்பூச்சி இனத்தின் உணவு ஆமணுக்கு இலை ஆகும்.
- இவற்றினால் உருவாகும் பட்டு எரி பட்டு என அழைக்கப்படுகிறது.