கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை 1. சிவாஜி - மலை எலி 2. முதலாம் பாஜி ராவ் - உத்கிர்போர் 3. தைமுர் ஷா - லாகூரின் வைஸ்ராய் 4. தேசிங்கு - செஞ்சி
Answers
Answered by
0
முதலாம் பாஜி ராவ் - உத்கிர் போர்
சிவாஜி - மலை எலி
- அஃப்சல்கான் சிவாஜியை மலை எலி என அழைத்தார்.
- அஃப்சல்கான் மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் எலியை (சிவாஜி) சங்கிலியில் கட்டி இழுத்து கொண்டு வருவேன் என கூறினார்.
சதாசிவ ராவ் - உத்கிர் போர்
- 1760 ஆம் ஆண்டு நடந்த உத்கிர் போரில் சதாசிவ ராவ் தலைமையில் பேஷ்வா அனுப்பிய இராணுவம் எதிரிகளை தோற்கடித்தது.
தைமுர் ஷா - லாகூரின் வைஸ்ராய்
- அப்தலி, தில்லியை விட்டு வெளியேறும் முன் மீர் பக்ஷியை தனது பிரதிநிதியாக நியமனம் செய்தார்.
- அவரது மகன் தைமூர் ஷா லாகூரின் (வைஸ்ராயாக) அரச பிரதிநிதியாக பதவியேற்றார்.
தேசிங்கு - செஞ்சி
- 1714 ஆம் ஆண்டு சுவரூப் சிங் மறைந்த பிறகு அவரது மகன் தேஜ் சிங் (தேசிங்கு) செஞ்சியின் ஆளுநராக பொறுப்பேற்றார்.
Similar questions