1. வழக்கு என்பது யாது?
2. வழக்கு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
3. இலக்கண போலியைச் சான்றுடன் விளக்குக.
4, மரூஉ என்பது யாது? சான்று தருக.
5. தகுதி வழக்கு என்றால் என்ன? சான்று தருக.
6. இடக்கரடக்கல் என்பது யாது? சான்று தருக.
7. மங்கலம் என்பது யாது? சான்று தருக.
8. குழூஉக்குறி என்பது யாது? சான்று தருக.
Answers
Answer:
please see the 5 photos i given





Explanation:
1. வழக்கு என்பது யாது?
நம் முன்னோர் எந்தெந்ச் சொற்கள் என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ அச்சொற்கள் அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்
2. வழக்கு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும்.
3. இலக்கண போலியைச் சான்றுடன் விளக்குக.
இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.
(எ.கா.) புறநகர், கால்வாய், தசை , கடைக்கண்.
இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். எனவே, இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.
4, மரூஉ என்பது யாது? சான்று தருக.
இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
(எ.கா.) கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு
5. தகுதி வழக்கு என்றால் என்ன? சான்று தருக.
ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.
தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
இடக்கரடக்கல்
மங்கலம்
குழூஉக்குறி
6. இடக்கரடக்கல் என்பது யாது? சான்று தருக.
பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.
(எ.கா.)
கால் கழுவி வந்தான்.
குழந்தை வெளியே போய்விட்டது.
ஒன்றுக்குப் போய் வந்தேன்.
7. மங்கலம் என்பது யாது? சான்று தருக.
மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.
(எ.கா.)
ஓலை – திருமுகம்
கறுப்பு ஆடு – வெள்ளாடு
விளக்கை அணை – விளக்கைக் குளிரவை
சுடுகாடு – நன்காடு
8. குழூஉக்குறி என்பது யாது? சான்று தருக.
ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.
(எ.கா.)
பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)
ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)