India Languages, asked by srinithish17506, 13 hours ago

நடவாமை என்பது எவ்வகை தொழிற்பெயர்
1.முதல் நிலை தொழிற்பெயர்
2.முதல் நிலை திரிந்த தொழிற்பெயர்
3.எதிர்மறை தொழிற்பெயர்
4.நேர்மறை தொழிற்பெயர்

Answers

Answered by rajeebsc001
6

Answer:

Option - 4

நடவாமை என்பது எதிர்மறை தொழிற்பெயர்

Answered by sarahssynergy
1

3.எதிர்மறை தொழிற்பெயர்

Explanation:

  • தமிழ்மொழி பெயர்களை உயர்திணை, அஃறிணை எனப் பகுக்கபட்டுள்ளது. மேலும் இது பொருள், இடம்,காலம்,சினை, குணம்,தொழில் என்று ஆறாகவும் பகுக்கபட்டுள்ளது. அவற்றுள் ஒன்றுதான் இந்தத் தொழிற்பெயர்.
  • செயல், செய்கை, செய்தல், செயற்கை என்றெல்லாம் வருவன தொழிற்பெயர். ஒரு வினை அல்லது செயலை குறிக்கும் பெயரானது எண், இடம்,காலம், பால் ஆகியவற்றை குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழில் பெயர் எனப்படும்.

        தொழிற்பெயரை இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.

1.முதனிலை அடிப்படையில் :

  • முதனிலைத் தொழிற்பெயர்
  • முதனிலை திரிந்த தொழிற்பெயர்  என்றும்
  • 2.விகுதியின் அடிப்படையில்:
  • விகுதி குன்றிய தொழிற்பெயர்
  • விகுதி குன்றாத தொழிற்பெயர் - என்றும் இரு வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.

எதிர்மறைத் தொழிற்பெயர் :

  • ஏதாவது ஒரு தொழில் நடைபெறாததை வெளிப்படுத்தும் சொற்களை எதிர்மறை தொழில் பெயர்  என்கிறோம். அத்தகைய எதிர்மறைப் பொருளில் வரும் தொழிற்பெயர், எதிர்மறைத் தொழிற்பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு: நடவாமை, கொல்லாமை.
  • "நடவாமை" என்ற சொல் தொழில் நிகழாமையை உணர்த்துவதால் இது எதிர்மறை தொழிற்பெயர் ஆனது.
Similar questions