India Languages, asked by lingadurai2206200622, 6 months ago

பகுபத உறுப்பிலக்கணம் தருக :

1.முகிழ்த்த

2.பாடுகிறோம்

3.அறியேன்

4.வந்து

5.மலைந்து​

Answers

Answered by αииιє
11

Answer:

??? I didn't get anything sorry

Explanation:

plz make me brainliest please

Answered by sarahssynergy
6

1) முகிழ்த்த = முகிழ் +த்+த் + அ

  • முகிழ் - பகுதி
  • த் - சந்தி
  • த் - இறந்தகால இடைநிலை
  • அ - பெயரெச்ச விகுதி.

2) பாடுகிறோம் = பாடு + கிறு + ஓம்

  • பாடு - பகுதி
  • கிறு - நிகழ்கால இடைநிலை
  • ஓம் - தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி.

3) அறியேன் - அறி +ய் +ஆ +ஏன்

  • அறி - பகுதி
  • ய் - சந்தி
  • ஆ - எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
  • ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று.

4) வந்து = வா(வ) + த்(ந்) + த் + உ

  • வா- பகுதி, 'வ' எனக் குறுகியது
  • த் – சந்தி, 'ந்' ஆனது விகாரம்,
  • த் - இறந்த கால இடைநிலை;
  • உ– வினையெச்ச விகுதி.

5) மலைந்து - மலை + த் (ந்) + த் + உ

  • மலை - பகுதி
  • த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
  • த் - இறந்தகால இடைநிலை.
  • உ - வினையெச்ச விகுதி.

Explanation:

  • பதம் என்றால் "சொல்" என்பது பொருள்.பதம்- சொல். சொல் இரண்டு வகைப்படும் அவை பகுபதம் மற்றும் பகாபதம் ஆகும்.
  • பிரிக்க முடியாத சொற்களை "பகாபதம்" என்றும் பிரிக்கக்கூடிய வகையில் அமைந்தசொற்களை "பகுபதம்" என்றும் கூறுவர்.
  • பகுபதத்தை பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்ற ஆறாகப் பகுக்க முடியும். இவை பகுபத உறுப்புகள் என்கிறோம்.
  • இவைபொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறுவகைப் பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு பிறக்கின்ற பெயர்ச்சொற்கள்; தெரிநிலை வினை ஆயினும், குறிப்பு வினை ஆயினும் காலத்தைக்காட்டுகின்ற வினைச் சொற்கள் ஆகியவை பகுபதங்கள் எனப்படும்.
Similar questions