World Languages, asked by krishoreraj, 2 months ago

பின்வரும் சொற்களுக்குத் தகுந்த இலக்கணக்குறிப்பினை எழுதுக.
1.விழிப்புணர்வுடன் இருத்தல்.
2.அவன் நல்லவன்.
3.ஆடுக பெண்ணே!
4.வந்ததும் சென்றதும் நன்மைக்கே…….
5.உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்.
6.”கொரோனா வந்தது” – என்ன மொழி?
7.”நல்ல படாஅ பறை” – என்ன அளபெடை? பின்வரும் சொற்களுக்குத் தகுந்த இலக்கணக்குறிப்பினை எழுதுக. 7X1=7
1.விழிப்புணர்வுடன் இருத்தல்.
2.அவன் நல்லவன்.
3.ஆடுக பெண்ணே!
4.வந்ததும் சென்றதும் நன்மைக்கே…….
5.உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்.
6.”கொரோனா வந்தது” – என்ன மொழி?
7.”நல்ல படாஅ பறை” – என்ன அளபெடை?

Answers

Answered by TYKE
0

குறள் 1 :

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

பொருள் :

நிலமானது, தன்னைத் தோண்டுபவரையும் தாங்குவதுபோல, நம்மை

இழிவுபடுத்துவோரையும் நாம் பொறுத்துக்கொள்வதே சிறந்த பண்பு.

சொற்பொருள் :

அகழ்வாரை – தோண்டுபவரை.

இகழ்வார் – இழிவுபடுத்துவோர்.

தலை – சிறந்த பண்பு.

இலக்கணக்குறிப்பு :

பொறுத்தல் – தொழிற்பெயர்.

அகழ்வார், இகழ்வார் – வினையாலணையும் பெயர்கள்.

பகுபத உறுப்பிலக்கணம் :

அகழ்வார் = அகழ் + வ் + ஆர். அகழ் – பகுதி, வ் – எதிர்கால

இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

அணி :

உவமையணி.

குறள் 2 :

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.

பொருள் :

பிறர் செய்யும் துன்பத்தை ஒருவர் பொறுத்துக்கொள்ளுதல்

சிறந்தது. அதனைவிடச் சிறந்தது அத்துன்பத்தை மறந்துவிடுதல்.

சொற்பொருள் :

பொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல்.

இறப்பினை – பிறர் செய்த துன்பத்தை.

இலக்கணக்குறிப்பு :

மறத்தல், பொறுத்தல் – தொழிற்பெயர்கள்

நன்று – குறிப்பு வினைமுற்று.

பகுபத உறுப்பிலக்கணம் :

மறத்தல் = மற + த் + தல். மற – பகுதி, த் – சந்தி,

தல் – தொழிற்பெயர் விகுதி.

குறள் 3 :

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.

பொருள் :

விருந்தினரை வரவேற்க இயலாது தவிர்க்கும் நிலை, வறுமையுள்

கொடிய வறுமையாகும். அதுபோல, அறிவற்றார் செய்யும் தீங்குளைப்

பொறுத்துக்கொள்ளுதல் வலிமையுள் சிறந்த வலிமையாகும்.

சொற்பொருள் :

இன்மை – வறுமை.

ஒரால் – தவிர்த்தல்.

மடவார் – அறிவற்றார்.

இலக்கணக்குறிப்பு :

விருந்து – பண்பாகு பெயர்.

ஒரால் , பொறை – தொழிற்பெயர்கள்.

அணி :

எடுத்துக்காட்டு உவமையணி.

குறள் 4 :

நிறையுடைமை நீங்காமை வேண்டின், பொறையுடைமை

போற்றி ஒழுகப் படும்.

பொருள் :

நற்குணங்கள் நம்மைவிட்டு நீங்காதிருக்க வேண்டுமானால்,

பொறுமையை நாம் போற்றிக் கடைபிடித்தல் வேண்டும்.

சொற்பொருள் :

நிறை – சால்பு.

இலக்கண குறிப்பு :

நீங்காமை – எதிர்மறைத் தொழிற்பெயர்.

போற்றி – வினையெச்சம்.

(இந்நூல் குறட்பாவும் பொறுமையின் சிறப்பினைக் கூறுகின்றன.)

குறள் 5 :

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே, வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

பொருள் :

பிறர் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்ளாமல் தண்டிப்பவரைச்

சான்றோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார். ஆனால், பொறுத்துக்

கொள்பவரைப் பொன்போல் மதித்து மனத்துள் வைத்துக்கொள்வர்.

சொற்பொருள் :

ஒறுத்தாரை – தண்டித்தவரை.

ஒன்றாக – ஒரு பொருட்டாக

பொதிந்து வைப்பர் – (மனத்துள்) வைத்துக்கொள்வர்.

இலக்கணக்குறிப்பு :

ஒறுத்தார் – வினையாலணையும் பெயர்.

பொதிந்து – வினையெச்சம்.

பகுபத உறுப்பிலக்கணம் :

வைப்பர் = வை + ப் + ப் + அர். வை – பகுதி, ப் – சந்தி, ப் –

எதிர்கால இடைநிலை, அர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

குறள் 6 :

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்

பொன்றும் துணையும் புகழ்.

பொருள் :

பிறர் செய்யும் தீமையைப் பொறுத்துக்கொள்ளாது தண்டித்தவருக்கு

ஒரு நாள் மட்டுமே இன்பம் கிட்டும். அதனைப்

பொறுத்துகொண்டவரின் புகழ், உலகம் உள்ளவரை நிலைத்து

நிற்கும்.

சொற்பொருள் :

பொன்றும் துணையும் – உலகம் உள்ளவரை.

இலக்கணக்குறிப்பு :

ஒறுத்தார், பொறுத்தார் – வினையாலணையும் பெயர்கள்.

பகுபத உறுப்பிலக்கணம் :

ஒறுத்தார் = ஒரு + த் + த் + ஆர். ஒறு – பகுதி. த் – சந்தி.

த் – இறந்தகால இடைநிலை. ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

குறள் 7 :

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து)

அறனல்ல செய்யாமை நன்று.

பொருள் :

செய்யத்தகாத துன்பச் செயல்களைப் பிறர் தனக்குச் செய்தாலும்,

தான் அத்துன்பத்துக்கு வருந்தி, அறத்துக்கு மாறான செயல்களை

அவருக்குச் செய்யாதிருத்தல் நல்லது.

சொற்பொருள் :

திறனல்ல – செய்யத்தகாத.

நோநொந்து – துன்பத்துக்கு வருந்தி.

இலக்கணக்குறிப்பு :

தற்பிறர் – ஏழாம் வேற்றுமைத் தொகை.

செய்யினும் – இழிவுச் சிறப்பும்மை

நொந்து – வினையெச்சம்.

அறன், திறன் – ஈற்றுப்போலிகள்.

Answered by amanjha45489794
0

Explanation:

பின்வரும் சொற்களுக்குத் தகுந்த இலக்கணக்குறிப்பினை எழுதுக.

1.விழிப்புணர்வுடன் இருத்தல்.

2.அவன் நல்லவன்.

3.ஆடுக பெண்ணே!

4.வந்ததும் சென்றதும் நன்மைக்கே…….

5.உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்.

6.”கொரோனா வந்தது” – என்ன மொழி?

7.”நல்ல படாஅ பறை” – என்ன அளபெடை? பின்வரும் சொற்களுக்குத் தகுந்த இலக்கணக்குறிப்பினை எழுதுக. 7X1=7

1.விழிப்புணர்வுடன் இருத்தல்.

2.அவன் நல்லவன்.

3.ஆடுக பெண்ணே!

4.வந்ததும் சென்றதும் நன்மைக்கே…….

5.உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்.

6.”கொரோனா வந்தது” – என்ன மொழி?

7.”நல்ல படாஅ பறை” – என்ன அளபெடை?

Similar questions