"உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் ________________
1கந்தபுராணம் 2சீறாப்புராணம் 3பெரியபுராணம்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
திருவருட் பிரகாச வள்ளலார்
Answers
விடை:
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்"" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் பெரியபுராணம்
விளக்கம்:
சென்னையில், இலிங்கிச் செட்டித் தெருவில் புராணத்தொடர் சொற்பொழிவு தொடர்ந்து பல நாள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒருநாள், அச்சொற்பொழிவை ஆற்ற வேண்டிய இராமலிங்கர் தமையனார் வர இயலாமையால், அவர், தம் ஒன்பது வயதுத் தம்பி இராமலிங்கரை அனுப்பி வைத்தார்.
அவ்வாறே சென்ற அவர், தம் தமையனின் நிலையை எடுத்துக்கூறிவிட்டு, 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்னும் பாடலைப் பாடி விட்டு, எல்லோரையும் கவரும் வண்ணம் நெடுநேரம் அப்பாட்டிற்குரிய பொருளையும் கூறினார்.
அச்சொற்பொழிவை மெய்மறந்து கேட்டப் பெரியோர் அடுத்த வரும் நாட்களிலும் இராமலிங்கரையே சொற்பொழிவாற்றுமாறு அன்புக் கட்டளை இட்டனர். அக்காலத்தே புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பினை பெற்றவர் வள்ளலார்.