Art, asked by sdivyabeautyparlour, 1 month ago

குறுவினா
1. மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறுப்படுகிறது
2. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?
சிறுவினா
1. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது
2. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக,
3. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?​

Answers

Answered by brainlystudent13
5

Answer:

Question 1.

மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறப்படுகிறது?

Answer:

(i) கடலைச் செடி, முருங்கைச் செடி, கருவேலங்காடு, காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது. பெற்றெடுத்த குழந்தைகளின் பசியைத் தீர்க்க முடியவில்லை .

(ii) கலப்பை பிடிப்பவரின் கை சோர்ந்து விட்டது, ஏற்றம் இறைப்பவரின் மனம் தவிக்கிறது என்றும் இதற்குக் காரணம் மழை இல்லாமையே இன்று உழவர் வேதனைப் படுகின்றனர்.

Question 2.

மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?

Answer:

மழை இல்லாததால் உழவுத் தொழில் செய்ய முடியவில்லை. எனவே மக்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர்.

Question 3.

கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?

Answer:

•வாளியில் கரைத்த மாவால் வாசலில் கோலம் போட்டனர்.

•இந்தக் கோலத்தைக் கரைக்க மழை வரவில்லை !

•பானையில் மாவைக் கரைத்து, பாதை எல்லாம் கோலம் போட்டனர்.

•அந்தக் கோலம் கரைக்கவும் மழை வரவில்லை .

Question 4.

மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.

Answer:

•கல் இல்லாத காட்டில் கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை பெய்யவில்லை.

•முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை .

•கருவேலங்காடும் மழையில்லாமல் பூக்கவில்லை.

•மழை இல்லாததால் காட்டு மல்லியும் பூக்கவில்லை.

Question 5.

மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?

Answer:

•மழைச் சோறு எடுத்தபின், பேய் மழையாக ஊசிபோல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது.

•சிட்டுப் போல மின்னி மின்னி ஊரெங்கும் பெய்கிறது.

•ஊரெங்கும் செல்ல மழை பெய்கிறது.

Hope It Helps!!。◕‿◕。

Please Mark Me Brainiest

Thanks

Similar questions