1 பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுந்தோட்டம்.
2 காலில்லாத பந்தல்; காணக்கான வியப்புஊருக்கெல்லாம் ஒரே கூரை; மழை வந்தால் ஒழுகும் கூரை.
3 ஊருக்கெல்லாம் ஒரே கூரை; மழை வந்தால் ஒழுகும் கூரை.
4 ஊருக்கெல்லாம் ஒரே போர்வை.
5 எல்லையில்லாக் கடலிலே, எங்குப் பார்த்தும் படகு இல்லை.
6 யாரும் சுருட்ட முடியாத பட்டுத் துணியில் எங்குப் பார்த்தாலும் நீல நிறம்.
7 அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி; பாதி நாள் குறைவாள்; பாதிநாள் வளர்வாள்.
8 பால் இல்லாமல் பருப்பாள்; நோய் இல்லாமல் இளைப்பாள்.
9 ஓர் அகப்பை மாவாலே ஊரெல்லாம் கல்யாணம்.
10 இளமையில் கொம்புண்டு; வளர்ந்ததும் கொம்பில்லை.
11 ஒரு கோப்பைப் பசும்பால், ஊரெல்லாம் பெருகிடுமாம்.
12 ஒரே ஒரு வெள்ளை விளக்கு; ஊருக்கெல்லாம் வெளிச்சம் தரும்.
Answers
Answered by
2
Explanation:
1.வானம்
2.முகில்
3.மேகம்
4.வானம்
5.வானம்
6.வானம்
7.நிலா
8.மதி
9.நிலா
Similar questions