1. பின்வரும் பத்தியைப் படித்து அதன் கருத்து மாறாமல் மூன்றில்
ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக..
இரட்டை
ஆட்சியில்
கல்வித்துறை சட்டமன்ற
ஆணைக்கு
உட்பட்டதாலும் பார்ப்பனிய எதிர்ப்பியக்கமாக நீதிக்கட்சி ஆட்சிப்
பொறுப்பினை ஏற்றதாலும் 1920 ஆம் ஆண்டு முதல் கல்வி வாய்ப்பு
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கிடைக்கத் தொடங்கியது. எனினும்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமுதாயத்தில் அடிமைகளாக வந்திருந்த
மக்களுக்குக் கல்வி பற்றிய விழிப்புணர்வு குறைந்திருந்தது. கல்வியால்
விளையும் பயன் பற்றி எண்ணாமல் இருந்தனர். இந்த நிலை 1920 இல்
ஏற்பட்ட நீதிக்கட்சியின் ஆட்சியில் மாறத் தொடங்கியது. 1920 ஆம்
ஆண்டின் கல்விநிலை பற்றியும் அதனை மாற்ற நீதிக்கட்சி மேற்கொண்ட
நடவடிக்கை பற்றியும் கீழே உள்ள குறிப்புக் கூறுகிறது.
அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும், கல்லூரியில் இடம்
பெற்றுப் படிக்க வாய்ப்பளிக்கும் திட்டம் ஒன்றை முதலமைச்சர் பனகல்
அரசரும்
கல்வி அமைச்சரும் சேர்ந்து உருவாக்கினர் பார்ப்பனர்
அல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்லூரியில் இடம்
கிடைக்காத நிலையே இருந்து வந்தது. இந்தத் தடையை அகற்றுவதற்குக்
கல்வி அமைச்சர் முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளையும்
மேற்கொண்டார்.
Answers
Answered by
1
Answer:
கல்வித் துறை சட்டமன்றம்
ஆர்டர் செய்ய
சித்தப்பிரமை நீதி எதிர்ப்பு ஆட்சிக்கு உட்பட்டது
Answered by
1
- ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமுதாயத்தில் அடிமைகளாக வந்திருந்த மக்களுக்குக் கல்வி பற்றிய விழிப்புணர்வு பற்றியும் கல்வியால் விளையும் பயன்கள் பற்றியும் தெரியாமல் இருந்தனர். இந்த நிலை 1920 இல் ஏற்பட்ட நீதிக்கட்சியின் ஆட்சியில் மாறத் தொடங்கியது. சில வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இந்நிலையை மாற்ற, அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும், கல்லூரியில் இடம் பெற்றுப் படிக்க வாய்ப்பளிக்கும் திட்டம் ஒன்றை முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் சேர்ந்து உருவாக்கினர்.
Explanation:
- செய்முறை: *கொடுக்கப்பட்டுள்ள பத்தியை தெளிவாக படிக்கவும்.
- பத்தியில் கொடுக்கப்பட்டுள்ள செய்தியின் கருத்தை நன்கு அறியவும்.
- செய்தியின் கூற வரும் கருத்தை கருத்தில் கொண்டு, பின் வாக்கியங்களை உருவாக்கவும்.
- வாக்கியங்களை உருவாக்கும் பொழுது பத்தியின் கருத்து குன்றாமல் உருவாக்க வேண்டும்.
- கொடுக்கப்பட்டுள்ள பத்தியை மூன்றில் ஒன்றாக சுருக்கி எழுத, பத்தியை படித்தறிந்து , கொடுக்கப்பட்டுள்ள செய்தியின் கருத்து மாறாமல் சுருக்கி எழுத வேண்டும்.
Similar questions