பொருள் எழுது
1. நஞ்சு
Answers
Answered by
4
Explanation:
உயிரியலைப் பொறுத்தவரை, நஞ்சு என்பது, உயிரினங்களுக்கு கெடுதியை அல்லது நலக்குறைவை அல்லது இறப்பைக்கூட ஏற்படுத்தக்கூடிய பொருட்களாகும்.[1] ஓர் உயிரினத்தினால் போதிய அளவில் உள்ளெடுக்கப்படும்போது, மூலக்கூற்று மட்டத்தில் நிகழும் வேதியியல் தாக்கத்தினால் அல்லது வேறு செயற்பாடுகளினால் இவ்வாறான கேடுகள் ஏற்படுகின்றன. நச்சியலின் (toxicology) தந்தை எனப்படுகின்ற பராசெலசு (Paracelsus) என்பார், எல்லாமே நஞ்சுதான் என்றும், நஞ்சு எல்லாவற்றிலும் உள்ளது என்றும் கூறினார். ஒரு பொருளை எவ்வளவு உள்ளெடுக்கிறோம் என்பதில்தான் அது நஞ்சா இல்லையா என்பது தங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சாகும் என்னும் பொது வழக்கு சொல்வதையும் ஏறத்தாழ இதே பொருளைத்தான் உணர்த்துகின்றது
Similar questions