சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை
ஈ) ஆழி
2. 'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
3. 'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) அறிந்தது அனைத்தும் ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வானம் அறிந்து
ஆ) வான் அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
எடுத்
Answers
Answered by
2
Answer:
1.அ. வைப்பு
2.ஆ) என்று + என்றும்
3. இ.வானம் + அளந்தது
4.இ) அறிந்ததனைத்தும்
5.இ) வானமறிந்த
Mark me as brainlist please
Answered by
2
விடை:
1 ) வைப்பு
2) என்று+என்றும்
3)வானம்+அளந்தது
4)அறிந்ததனைத்தும்
5)வானமறிந்த
விரிவு:
- மக்கள் வாழும் நிலப்பகுதியை வைப்பு என்று கூறுவர்.
- என்றென்றும் என்னும் வார்த்தையைப் பிரித்து எழுதும்போது என்று+என்றும் என பிரிந்து வரும்.
- வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதும்போது வானம்+அளந்தது என பிரிந்து வரும்
- அறிந்தது + அனைத்தும் இதனை சேர்த்து எழுதும்போது அறிந்ததனைத்தும் என வார்த்தை உருவாகும்
- வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் வானமறிந்த . இதில் ம்+அ= ம எனதிரிந்து வருகிறது
Similar questions