India Languages, asked by nishanthini0040, 5 months ago

1. கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை​

Answers

Answered by Afrinnadaf
5

Answer:

கொங்கு மண்டல சதகம் என்பது கொங்கு மண்டலத்தைப் பற்றிப் பாடிய சதகம். சதகம் என்பது நூறு செய்யுட்களாற் பாடுவது. "விளையுமொருபொருண் மேலொருநூறு, தழையவுரைத்தல் சதகமென்ப" என்பது இலக்கண விளக்கப்பாட்டியல் - 86.

சதகம் பல பொருள் பற்றிப் பாடப்பெறும். இது வரலாறு பற்றிப் பாடப்பெறும் சதகவகையைச் சார்ந்தது. இந்நூலின்கண் வரும் முதல் மூன்று பாடல்களும் பாயிரமாகவமைந்த ஆசிரிய விருத்தங்கள், நூலுக்குரியனவாகப் பாடப்பெற்ற பாடல்கள் நூற்றொன்றும் கட்டளைக் கலித்துறைகள்.

"வடித்தமிழ் நூலையாசான் வாலசுந்தரம் யான் சொன்னேன்" எனப் பாயிரம் கூறுவதால் இந்நூலாசிரியரின் பெயர் வாலசுந்தரக்கவிஞர் எனத் தெரிகின்றது.

"இம்முடிவாரணவாசியெங்கள் வடமலை முன்னவன்" என விசயமங்கலத்தில் வாழ்ந்த வாரணவாசி முதலியோரை 'எங்கள்' என உரிமை பாராட்டிக் கூறுதலின் இந்நூலாசிரியர் குறும்பு நாட்டு விசயமங்கலத்தைச் சார்ந்தவரெனத் தெரிகிறது.

இந்நூல்(கொங்கு மண்டல சதகம்) முகப்பில் விநாயகர் காப்புக் கூறுதலின் ஆசிரியர் சைவ சமயத்தினரென்பது துணிபு. ஆசிரியர் வெண்ணைநல்லூர்ச் சடையன் (சடையப்ப வள்ளல்) வாழ்ந்த காலமாகிய கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனப்புலப்படுகின்றது. கொங்கு மண்டல சதகம் 7ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தது எனவும் கருதப்படுகின்றது

சதகம் வரலாற்றை கூறுவதால் 13, 17ஆம் நூற்றாண்டுகளிலும் கார்மேகக் கவிஞர், கம்பநாதசாமி ஆகியோராலும் கொங்கு மண்டல சதகம் பாடப்பெற்றது. ஆக "கொங்கு மண்டல சதகம்" என்பது கார்மேகக் கவிஞர்,[2]வாலசுந்தரக் கவிராயர், கம்பநாதசாமி ஆகியோர் இயற்றிய கொங்கு மண்டல சதக நூல்கள் மூன்றினையும் கொண்டதாகும்.

13ஆம் நூற்றாண்டில் கார்மேகக்கோனார் கொங்கு மண்டல சதகத்தை எழுதினார். கொங்கு நாட்டு பிரிவுகளையும், ஊர்தொகையையும் இதில் விரிவாகக் கூறினார். 7 ஆம் நூற்றாண்டிலேயே இப்பிரிவு இருந்தது என்றாலும் 13ஆம் நூற்றாண்டினது விரிவாக உள்ளது

'கொங்கு மண்டல சதகங்கள்' என்னும் பெயரில் மூன்று நூல்கள் கிடைத்துள்ளன. திரு. முத்துசாமிக் கோனார் அவர்கள் கார்மேகக்கவிஞரின் கொங்கு மண்டல சதகத்தை உரையுடன் வெளியிட்டார். நூறு கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களாற் கொங்கு மண்டலச் சிறப்பை உணர்த்தக் கருதிப் பாடப்பட்ட ஒரு நூல். திரு. வே.ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் அவர்கள் 1971ஆம் ஆண்டில் உரைவிளக்கக் குறிப்புகளுடன் வாலசுந்தரக் கவிராயரின் கொங்கு மண்டல சதகத்தை வெளியிட்டுள்ளார்கள். இப்பொழுது கம்பநாதசாமிகளின் கொங்கு மண்டல சதகமும் கிடைத்துள்ளது.

hope you will like it...❤

Similar questions