1) தொகைச் சொற்களை விரித்தெழுதுக.
வருவினை-
ஆ) இருதினை -
Answers
தொகைச் சொற்களை விரித்தெழுதுதல்
1.அறுசுவை--இனிப்பு கசப்பு புளிப்பு உவர்ப்பு கார்ப்பு துவர்ப்பு.
2.இருமை--இம்மை ,மறுமை
3. இருசுடர்--ஞாயிறு ,திங்கள்
4. இரு திணை--உயர்திணை ,அஃறிணை
5. ஈரெச்சம்--பெயரெச்சம் ,வினையெச்சம்
6. மூவிடம்--தன்மை, முன்னிலை ,படர்க்கை
7. முக்காலம்--இறந்த காலம் ,நிகழ் காலம், எதிர்காலம்
8. முந்நீர்--ஆற்று நீர், ஊற்று நீர் ,மழை நீர்
9. முப்பால்--அறத்துப்பால், பொருட்பால் ,காமத்துப்பால்
10. முத்தமிழ்--இயற்றமிழ், இசைத்தமிழ் ,நாடகத்தமிழ்,
11. முப்பகை--காமம் ,வெகுளி ,மயக்கம்.
12. முக்குடை--சந்திராதித்தம், சகலாபாசனம், நித்தவிநோதம்.
13. முக்கனி--மா பலா வாழை.
14. மூவேந்தர்--சேரன், சோழன் ,பாண்டியன்.
15. மூன்று ஒளி மண்டலங்கள்-- ஆலோகம், பிரபாமூர்த்தி, கனப்பிரபை.
16. திரிபலை--நெல்லிக்காய் ,தான்றிக்காய் ,கடுக்காய்.
17. நான்மறை--ரிக், யஜுர், சாமம் ,அதர்வணம்.
18. நாற்குணம்--அச்சம், மடம் ,நாணம் ,பயிர்ப்பு.
19. நாற்படை--தேர் ,யானை ,காலாள், குதிரை.
20. நாற்றிசை-- கிழக்கு ,மேற்கு ,வடக்கு ,தெற்கு.
21. நாற்பால்--அரசர் ,அந்தணர், வணிகர் ,வேளாளர்.
22. நாற்பொருள்-- அறம் ,பொருள் ,இன்பம்,வீடு.
23. நாற்கரணம்--மனம், புத்தி, சித்தம் ,அகங்காரம்.
24. ஐம்பெரும் பொருள்கள்--நிலம் நீர் காற்று நெருப்பு வானம்.
25. ஐம்புலன்--ஊறு, சுவை ,ஒளி ,நாற்றம் ,ஓசை.
26. ஐம்பொறி--மெய் ,வாய் ,கண், மூக்கு ,செவி.
27. ஐம்பெருங்காப்பியம்--சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி,
வளையாபதி ,குண்டலகேசி.
28.ஐந்திலக்கணம் எழுத்திலக்கணம் ,சொல்லிலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம்,அணியிலக்கணம்.
29. ஐந்தொகை--முதல் ,வரவு ,செலவு ,இருப்பு ,ஆதாயம்.
30. ஐம்பால்-- ஆண்பால், பெண்பால் ,பலர்பால், ஒன்றன்பால் ,பலவின்பால்.
31. ஐந்திணை-- குறிஞ்சி ,முல்லை, மருதம் ,நெய்தல் ,பாலை.