English, asked by brainlyqueen128, 8 months ago

1. சான்று தருக.
(3x1=3)
1. தொகைநிலைத் தொடர் வகை
அ) இரண்டு ஆ) நான்கு இ) ஆறு ஈ) ஏழு
2. வேற்றுமை அல்லாதன
அ) ஐ. ஒடு ஆ) கு, இன் இ) ஆகிய, ஆன ஈ) அது, கண்
3. கோவை சென்றான் - இத்தொடரில் அமைந்த வேற்றமைத்தொகை
அ) மூன்றாம் வேற்றுமைத் தொகை
ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை
இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
ஈ) ஆறாம் வேற்றுமைத் தொகை
1.இலக்கணக் குறிப்புத் தருக.
(3x1=3)|
4. செங்காந்தள், வட்டத்தொட்டி
அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை
5. முறுக்கு மீசை வந்தார்
அ) அன்மொழித்தொகை
ஆ) நான்காம் வேற்றுமைத்தொகை
இ) உவமைத்தொகை
இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
6. எழுகதிர்
அ) பண்புத்தொகை ஆ) அடுக்குத்தொடர் இ) வினைத்தொகை ஈ) இரட்டைக்கிளவி
I.கோமட்டஇடங்களை நிரப்புக.​

Answers

Answered by khajadeen65292
7

Answer:

1) ஆறு

2) ஐ ஒடு

3) நான்காம் வேற்றுமைதத் தொகை

4) பண்புத்தொகை

5) அன்மொழித்தொகை

6) இரட்டைக்கிளவி

Answered by zumba12
1

1. தொகைநிலைத் தொடர் வகை

விடை :  இ) ஆறு

   தொகைநிலைத் தொடரானது வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை என ஆறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

2. வேற்றுமை அல்லாதன

விடை :  இ) ஆகிய, ஆன

    வேற்றுமை உருபுகள்  :   ஐ , ஆல் , கு , இன் , அது , கண்                                                                                                                                  

3. கோவை சென்றான் - இத்தொடரில் அமைந்த வேற்றமைத்தொகை

      ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.  

விடை :   ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை

   கோவை சென்றான் - கோவைக்குச் சென்றான்

இத்தொடரில் கு எனும்  நான்காம் வேற்றுமைத் தொகை மறைந்து வந்துள்ளது

4. செங்காந்தள், வட்டத்தொட்டி

     நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் "மை" என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

  விடை :   ஆ) பண்புத்தொகை    

      செங்காந்தள் = செம்மையாகிய காந்தள்

      வட்டத்தொட்டி = வட்டமான தொட்டி

5. முறுக்கு மீசை வந்தார்

       வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகை நிலைத் தொடர்களில் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்.

    விடை :  அ) அன்மொழித்தொகை

           முறுக்கு மீசையை உடையவர் வந்தார் எனத் தொகை நிலைத்தொடர் அல்லாத வேறு சொல் மறைந்து நின்று பொருள் தருகிறது.

6. எழுகதிர்

        பெயரெச்சத்தின் விகுதியும் காலம் காட்டும் இடைநிலையும் கெட்டு வினையின் முதல்நிலை மட்டும் நின்று அதனோடு பெயர்ச்சொல் தொடர்வது வினைத்தொகை.

       விடை :  இ) வினைத்தொகை    

                மனித வாழ்க்கை எழுகதிர் போன்றது

Similar questions