1 குழவி என்பதன் பொருள் ____________________.
அ) ஒருவகைத் தேனீ ஆ) ஒருவகைக் குருவி இ) குழந்தை
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word Page59 இலக்கணம் 2
TNSCERT Class 8
Answers
குழந்தை
"அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு."
பொருள்
அன்பே ஒருவருக்கு தாய் எனலாம். அன்பே ஆதார சக்தி. அன்பு ஈன்றெடுத்த கைக்குழந்தையே அருள், அதாவது கருணை. பிற உயிர்கள் மேல் அன்பிருந்தால்தான் அருள் பிறக்க முடியும். அருள் என்ற கைக்குழந்தையை வளர்த்தெடுத்து ஆளாக்க வல்லது பொருட்செல்வமே. ஆதலால் பொருட்செல்வம் என்பது செவிலித்தாய். வளர்ந்த அருளின் ஆற்றலால் பலருக்கு நன்கு உதவ முடியும். செல்வம் நிலையில்லாதது எனினும் செல்வத்தை முற்றிலும் நிராகரிக்காமல் அதன் அவசியத்தை அதன் வலிமையை கூறுயுள்ளார் திருவள்ளுவர்.
பொருள் இல்லை என்றால் நாம் ஒருவித கையிறு நிலையில் பிறருக்கு உதவ முடியாமல் இருப்போம். ஆதலால் பொருள் அக்கையிறு நிலையை அறுத்து ஒருவித நிதி விடுதலையை தருகிறது. தர்சார்பு கொடுக்கிறது. பொருள் இருப்போர்க்கே அறம் செய்தல் ஏதுவாகும் என்பதைச் சொல்லும் குறள். அரசானாலும், குடிமக்களானாலும், பொருள் ஈட்டுவதால் மட்டுமே, அவர்களின் அன்பின் காரணமாக வருங் கருணையால் பிறர்க்கு நன்மை செய்ய இயலும்.