1. பாவலரேறுவின் திருக்குறள் மெய்ப் பொருளுவை துமிழுக்க அமைந்தது.
Answers
Answer:
தமிழில் திருக்குறள் தோன்றிய வரலாறு என்பது பல்வேறு புனைவுகளுக்கும் கற்பனைகளுக்கும் இடமளிப்பவையாக உள்ளது. திருவள்ளுவர் பிறப்பு கதை தொடங்கி சமயம், குலம், தொழில் போன்றவை அவற்றில் முதன்மையில் நிற்பனவாகும். திருவள்ளுவரின் மனைவி குறித்த புனைவுகளும் அவற்றில் அடங்கும். திருக்குறள் என்னும் நூலுக்குச் சொந்தம் கொண்டாட பல்வேறு சமயங்களும் சாதிகளும் வரித்துக்கட்டிக் கொண்டு முன்வருகின்றன. அவற்றுள் பல அறிஞர்களும் தம்தம் மனக்கருத்துகளைத் திணித்து வந்தனர்/வருகின்றனர். ஆயினும், ஒருசிலர் பொதுத்தன்மையிலான நேர்கருத்துகளை முன்வைத்து உரை எழுதினயுள்ளனர்.குறளுக்கு 300க்கு மேற்பட்ட உரையாசிரியர்கள் உரையெழுதியுள்ளனர். அவற்றுள், கருத்து வேறுபாடுகளும் முரண்களும் அதிகம் எழுகின்றன. முதலாவதாக எழுந்த உரைகளாகப் பதின்மர் -10 உரைகளைக் கூறுவர். அதாவது தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர், மல்லர், காளிங்கர், மணக்குடவர், பரிபெருமாள், பரிதியார், பரிமேலழகர் போன்றோரின் உரைகள் எழுந்ததாகத் தனிப்பாடல் வெண்பா சுட்டுகிறது. அவ்வமைப்பு முறையில் இறுதி ஐவரின் உரைகள் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றன. அந்தவகையில் இறுதியான பரிமேலழகரின் உரையே சிறந்த உரையாகக் கொள்ளப்பெறுவது என்பது கருத்துமுரணே ஆகும்.