1ஆறாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது
Answers
Answered by
0
Answer:
ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! இரண்டு சொற்களைச் சேர்த்து எழுதும்போது இடையில், சில இடங்களில் வல்லின மெய் எழுத்துகள் (க் ச் த் ப்) மிக்குவரும். சில இடங்களில் மிகாமல் வரும்.
மிக்கு வர வேண்டிய இடங்களில் மிகாமலும், மிகாமல் வர வேண்டிய இடத்தில் மிக்கும் வந்தால் பொருள் மாறுபட்டுக் குழப்பம் ஏற்படும். எடுத்துக்காட்டாக, ‘தந்தத்தினால் செய்த பொம்மை என்பதைக் குறிப்பிட, தந்தப் பொம்மை’ என்று வல்லினம் மிக்கு எழுதுதல் வேண்டும். இதனை, தந்த பொம்மை என்று வலி மிகாமல் எழுதினால், ஒருவர் மற்றொருவருக்குத் தந்த(கொடுத்த) பொம்மை என்று பொருள் தரும் அல்லவா?
ஆகவே, வல்லினம் மிகும் இடம், மிகா இடம் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்துகொள்ளுதல் வேண்டும். முதலில், வல்லினம் மிகும் இடங்கள் பற்றி அறிந்துகொள்க.
Similar questions