பொருத்துக. அ) மனிதச் சிறுநீர் - 1) ஆக்சின் B ஆ) மக்காச்சோள எண்ணெய் - 2) GA3 இ) பூஞ்சைகள் - 3) அப்சிசிக் அமிலம் II ஈ) ஹெர்ரிங் மீன் விந்து - 4) கைனடின் உ) இளம் மக்காச்சோளம் - 5) ஆக்சின் A ஊ) இளம் பருத்திக் காய் -6) சியாடின் (1) அ-3, ஆ-4, இ-5, ஈ-6, உ-1, ஊ-2 (2) அ-5, ஆ-1, இ-2, ஈ-4, உ-6, ஊ-3 (3) அ-3, ஆ-5, இ-6, ஈ-1, உ-2, ஊ-4 (4) அ-2, ஆ-3, இ-5, ஈ-6, உ-4, ஊ-1
Answers
Answered by
0
can't understand language please ask question in hindi or english language.....
Answered by
0
அ-5, ஆ-1, இ-2, ஈ-4, உ-6, ஊ-3
மனிதச் சிறுநீர்
- 1931ல் கால், ஹாஜன் ஸ்மித் ஆகியோர் மனிதச் சிறுநீரிலிருந்து ஆக்சினை பிரித்தெடுத்து அதற்கு ஆக்சின் A எனப் பெயரிட்டனர்.
மக்காச்சோள எண்ணெய்
- 1934ல் மக்காச்சோளத் தானிய எண்ணெயிலிருந்து ஆக்சின் போலச் செயல்படும் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன.
- இந்த பொருட்கள் ஆக்சின் B என அழைக்கப்பட்டது.
பூஞ்சைகள்
- பூஞ்சைகள் மற்றும் உயர் தாவரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜிப்ரலின்கள் உள்ளதாக கண்டறியப்பட்டன.
- அவை GA1, GA2, GA3 என பெயரிட்டப்பட்டன.
- இதில் GA3 ஆனது பூஞ்சைகளில் இருந்து முதலில் கண்டறியப்பட்ட ஜிப்ரலின் ஆகும்.
ஹெர்ரிங் மீன் விந்து
- 1954ல் மில்லரி மற்றும் ஸ்கூக் என்பவர்களால் புகையிலை பித் செல்களில் ஹெர்ரிங் விந்து செல்களிலிருந்து உருவாக்கப்பட்ட வெப்பசிதைவுற்ற டிஎன்ஏ செல்பகுப்பினை தூண்டுவது கண்டறியப்பட்டது.
- செல் பகுப்பை தூண்டும் பொருள் கைனடின் என அழைக்கப்பட்டது.
இளம் மக்காச்சோளம்
- 1964ல் லெதம் மற்றும் மில்லர் என்பவர்களால் இளம் மக்காச்சோளத் தானியத்தில் புதிய சைட்டோகைனின் கண்டறியப்பட்டது.
- இது சியாடின் எனப்பட்டது.
இளம் பருத்திக் காய்
- 1963ல் அடிகாட் மற்றும் அவரின் குழுவினாரால் இளம் பருத்திக் காய்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஹார்மோன்களுக்கு அப்சிசிக் அமிலம் II என்று பெயர்.
- இது தற்போது அப்சிசிக் அமிலம் என அழைக்கப்படுகிறது.
Similar questions