English, asked by mgduraisamy, 2 months ago

1)பழமொழியைப் படித்து கருத்தை எழுதுக.
i)யானைக்கும் அடிசறுக்கும்​

Answers

Answered by Anuiniya
1

Answer:

"யானைக்கும் அடி சறுக்கும்" என்ற பழமொழியின் சரியான பொருள் என்ன?

வன விலங்குகள் பற்றிய காணொளிகளைப் பார்க்கும் வரை இது பெரிய மனிதர் பற்றிச் சொல்லப்படும் நொண்டிச் சமாதானமாக நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் உண்மையாகவே யானைகள் சந்தேகமான நிலத்தடத்தில் போகும் பொழுது தனது முன்னங்காலால் நிலத்தை பலமானது என உறுதிப் படுத்திய பின்னர்தான் தானும் தனது கூட்டமும் நகரத் தொடங்குவதைக் கவனித்தேன்.

ஆனால் அத்தனை எச்சரிக்கையாக அது நடந்தாலும் அதன் அடி சறுக்குவதையும் அதிலிருந்து தப்பிக்க மற்றக் காலால் முயன்று மீளமுடியாத மரணத்தில் மாண்டு போவதையும் பார்க்கும் பொழுது இந்தப் பழமொழி எந்த அளவுக்குப் பொருள் கொண்டுள்ளது என வியக்க வைக்கிறது

Similar questions