India Languages, asked by StarTbia, 1 year ago

1. பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப்பற்றினை விளக்குக
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter5 பரிதிமாற்கலைஞர்-
Page Number 21 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
8

விடை:


பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப்பற்று:


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழுக்கு தொண்டாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பரிதிமாற்கலைஞர். மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர். தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது இயற்பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்பதை தூய தமிழில் பரிதிமாற் கலைஞர்  என்று மாற்றிக்கொண்டார்.


தமிழ்த்துறை பணியை விரும்பி ஏற்றல்:


சென்னை கிறித்துவக்  கல்லூரியில் தமிழும் தத்துவம் கற்று முதல் மாணவராக தேறினார். தமக்கு வழங்கப்பட்ட தத்துவத் துறைப் பணியையும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதவியையும் ஏற்காமல் தமிழ்த்தொண்டிற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்ப்பால் சென்னை பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியை கொண்டு வரும் முடிவை கைவிட்டது. தம்முடைய இல்லத்திலேயே மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து, அவர்களை "இயற்றமிழ் மாணவர்" என அழைத்தார்.

 

தமிழ்ப்புலமையும் தனித்தமிழ்ப்பற்றும் :

 

ஆங்கிலப் பேராசிரியர் வில்லியம் மில்லர் என்பவர் டென்னிசன் இயற்றிய "ஆர்தரின் இறுதி" என்னும் நூலில் இருந்து ஒரு பாடலில் படகின் துடுப்பு அன்னப்பறவைக்கு உவமையாக கூறப்பட்டது. தமிழில் இது போன்ற உவமைகள் உண்டா என அவர் கேட்க, பரிதிமாற் கலைஞர் கம்பராமாயண குகப்படலத்தில் உள்ள "விடுநனி கடிது" என்னும் பாடலை பாடி பொருள் கூறி தமிழின் பெருமையை நிலைநாட்டினார்.

 

தமிழின் சிறப்பை உணர்த்தல்:

வடமொழியும் தமிழ்மொழியும் கலந்து எழுதுதல் என்பது, தமிழ்மணியோடு பவளத்தைப்போலச் செந்நிறம் உடையதான மிளகாய்ப் பழம் கலந்தது போன்ற பயனையே தந்தது என்பது பரிதிமாற்கலைஞர் கருத்து.  தமிழ்த்தாயின் எழில் மிகுந்த உடலுக்கு, மணிப்பிரவாள நடை எரிச்சலைத் தான் தரும் என்பதனை உணர்ந்த பரிதிமாற் கலைஞர், வடசொல் கலப்பைக் கண்டித்தார்.

 

இவ்வாறு பிறமொழி கலப்பின்றி தனித்தமிழில் பேசுவது மற்றும் எழுதுவதையே தனது வாழ்நாளில் உயிர்மூச்சாக கொண்டார். அவரது தமிழ்ப்பற்றை விரிவாக விளக்கி கொண்டே போகலாம்.

Similar questions