பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு. அ) சிட்ரஸ் அடிநுனி இறப்பு - 1) Mo ஆ) சாட்டை வால் நோய் - 2) Zn இ) பழுப்பு மையக் கருக்கல் நோய் - 3) Cu ஈ) சிற்றிலை நோய் - 4) B 1) அ) (3), ஆ) (2), இ) (4), ஈ) (1), 2) அ) (3), ஆ) (1), இ) (4), ஈ) (2), 3) அ) (1), ஆ (3), இ (2), ஈ (4), 4) அ (3), ஆ (4), இ (2), ஈ (1)
Answers
Answered by
0
Answer:
please make me understand the question
Explanation:
and write in english
Answered by
1
அ) (3), ஆ) (1), இ) (4), ஈ) (2)
சிட்ரஸ் அடிநுனி இறப்பு - Cu
- Cu (தாமிரம்) பற்றாக்குறையின் காரணமாக சிட்ரஸ் தாவரத்தில் தண்டு நுனியடி இறப்பு, பின்பக்க இறப்பு, தானியங்கள் மற்றும் லெகூம் தாவரங்களில் நுனி உதிர்தல் நோய், பச்சைய சோகை, திசு இறப்பு மற்றும் சிட்ரஸ் தாவரத்தில் எக்சாந்திமா நோய் முதலியன நோய்கள் ஏற்படுகிறது.
சாட்டை வால் நோய்- Mo
- மாலிப்டினம் (Mo) பற்றாக்குறையின் காரணமாக பச்சைய சோகை, திசு இறப்பு, மலர் உருவாதல் தாமதமடைதல், குன்றிய வளர்ச்சி, காலிஃபிளவரில் சாட்டை வால் நோய் முதலியன ஏற்படுகிறது.
பழுப்பு மையக் கருக்கல் நோய் - B
- போரானின் பற்றாக்குறையால் வேர், தண்டு, நுனி இறப்பு, கனிகள் பழுக்கும் முன்பே உதிர்தல், பீட்ரூட்டின் பழுப்பு மையக் கருகல் நோய் முதலியன ஏற்படுகிறது.
சிற்றிலை நோய் - Zn
- துத்தநாகத்தின் பற்றாக்குறையால் ஆக்ஸின் குறைபாடு காரணமாக இலைகள் சிறுத்து மற்றும் பல்வண்ணமடைதல் ஏற்படுகிறது.
Similar questions