1.தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும்
கட்டுரை வரைக.
plssss urgent
Answers
Answer:
தமிழின் சொல்வளம்
பதிவு செய்த நாள்: மார் 04,2019 09:14


Share
பொருள் வளம், சுவை வளம், சொல் வளம் என, எல்லாவற்றிலும் குறையே காணமுடியாத மொழி, தமிழ்மொழி. இதன் சிறப்பை, சில சொற்களின் உருவாக்க அடிப்படையில் கண்டு வியக்கலாம்.
உண்ணுகின்ற சோற்றைக் குறிக்கும் சொல், அவிழ்பதம். அதாவது பதமாக வெந்து நிற்பதைக் குறிப்பது. அவிழ்தல் என்றால், பல பொருள்கள் உண்டு. மலர்தல், விரிதல், விடுபடல். இங்கே சோறு, அரிசி எனும் நிலையிலிருந்து மாறி, நீரில் வெந்து மலர்வதை அழகாக அவிழ்பதம் என்ற சொல்லால் குறிக்கின்றனர்.
* காலைத் தொட்டுக்கொண்டு நம்மை பல துன்பங்களிலிருந்து காக்கின்ற தோல் எனும் பொருளில் செருப்பிற்குத் 'தொடுதோல்' எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். செருப்பு, காலணி என்பதைவிட, தொடுதோல் என்பது நெருங்கிய உறவுநிலைபோல உணர வைக்கிறது.
* வண்டைப் பறவை இனத்தில் சேர்த்திருக்கின்றனர். வண்டு இரண்டிற்கும் மேற்பட்ட கால்களைக் கொண்டிருப்பதால், அதனை பல்காற்பறவை (பல கால்களையுடைய) என்றனர். இன்னும் ஒரு புலவர், (பெயர்: 'பெருவழுதி' நூல், நற்றிணை. 'அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்') வண்டு ஆறு கால்களைக் கொண்டிருப்பதால், 'அறுகால் பறவை' என்று சொல்லி இருப்பது பெருமையான சொல்லாக்கம்.
முள்போன்ற கருவி எனும் பொருளில், யானையைக் கட்டுப்படுத்தும் அங்குசத்தை 'கவை முட்கருவி' என்றனர். கவை என்பது வளைவு. ஏரைக் கொண்டு நிலத்தை உழுது, அதில் பயிரிட்டு உண்பவர்கள் உழவர்கள். இதைக் குறிக்க 'ஏரின் வாழ்நர் ' எனும் சொல் அழகுற உருவாக்கப்பட்டுள்ளது.
- ஹரிணி