World Languages, asked by magdalenedinah, 3 months ago

திருக்குறள்
1). what is the History of திருக்குறள்?
2) what is the original title of திருக்குறள் ?
3) who is the author of திருக்குறள்?

Answers

Answered by Jaiakash86
1

Answer:

Your answer is below pls follow

Explanation:

1) The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or kurals. The text is divided into three books with aphoristic teachings on virtue (aram), wealth (porul) and love (inbam), respectively

2) Original title Muppāl

Working title Kural

Country India

3) Thirukkural

Answered by Pratheesh12
0

Answer:

Explanation:

1) திருக்குறள் சங்க காலத்தைச் சேர்ந்த இலக்கியம். இந்த இலக்கியம் பதினென்கீழ்க்கனக்கு எனப்படும், பதினெட்டு நூல்களில் ஒன்று. திருக்குறள் என்பது இவ்விலக்கியத்தின் இயற்ப்பெயர் அல்ல. இவ்விலக்கியத்தில் உள்ள பாடல்கள் குறள் வெண்பா மரபில் உள்ளதால், திருக்குறள் என்ற பெயர் பெற்றது. இந்தப் படைப்பில் ஒரு பகுதியே கிடைத்ததாக கூறப்படுகிறது. அவை கீழே கூறியபடி 1330 குறள்கள் கொண்டது. இந்த படைப்பை இயற்றியவரின் பெயர் உறுதியாக கண்டறியவில்லை. இதுவரை சேகரித்த தகவல்படி வள்ளுவ மரபைச் சேர்ந்தவர் என்பதால் திருவள்ளுவர் என்ற பெயர் பெற்றார்.

விளக்கம் எண்ணிக்கை

பால் 3

இயல் 13

அதிகாரம் 133

குறள் 1330

திருக்குறள் மூன்றுப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை அறம், பொருள் மற்றும் காமம் (இன்பம்) என்று முப்பாலாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாலும் பல இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் பல அதிகாரங்களை கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறள்கள் உள்ளன. ஒவ்வொரு குரளும் இரண்டு அடிகளைக் கொண்டது, முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாவது அடியில் மூன்று சீர்களும் உள்ளன.

திருக்குறள் ஓர் வாழ்வியல் நூல். இந்நூலில் வாழ்வின் எல்லா அங்கத்தையும் கூறியுள்ளது. இதில் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறியை மிக சுருக்கமாகவும், எக்காலத்திற்கும் ஏற்கக்கூடிய வகையிலும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்டத்தில் பலர் திருக்குறளை 'முன்னுக்குப் பின் முரணாக' கூறப்பட்டுள்ளதாக விவாதங்கள் பலவுண்டு. அவற்றுள் ஓர் கருத்து மிக ஏற்புடையதாக நாம் கருதுகிறோம். 'திருக்குறள் ஓர் மருந்தகத்தைப் போன்றது. இதில் வயிற்றுப்போக்கை நிருத்துவதர்க்கும் மருந்து உண்டு. அதைப் போலவே வயிற்றை சுத்தம் செய்யும் மருந்தும் உண்டு. நம் தேவைக்கு ஏற்ப மருந்தை எடுத்து கொள்வது நன்று.'

திருக்குறளுக்கு பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவற்றுள் சில உலகப் பொது மறை, தெய்வநூல், தமிழ் மறை மற்றும் பொய்யாமொழி ஆகும். இந்நூல் உலகிலேயே மிக அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்றாக கூறப்படுகிறது. பல பேரறிஞர்கள் இந்த படைப்புக்கு உரை எழுதியுள்ளனர். அவர்களில் திரு.பரிமேலழகர் மற்றும் திரு.மு.வரதராசனார் அவர்களின் உரைகள் மிக நேர்த்தியனவையாக பெரும்பாலோரால் ஏற்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி மட்டுமின்றி, மேலும் பல மொழிகளில் பல அறிஞர்களால் உரை எழுதியுள்ளனர்.

2) there is nothing

3) Thiruvalluvar, திருவள்ளுவர்

Similar questions