பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (10, 11, 12, 12, 14) விடைதருக.
"வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதிரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டூ நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"
1. மேலுள்ள பாடலடிகள் இடம்பெற்ற நூல் எது£
௮. நற்றிணை ஆ. சிலப்பதிகாரம்
இ.புறநானூறு ஈ.குறுந்தொகை
2. 'காருகர்- என்பதன் பொருள் -
௮. தருபவர் ஆ. பெறுபவர்
இ. நெய்பவர் ஈ. விற்பவர்
3. பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்கள் -
௮. பகர்வனர், பட்டினும் ஆ.காருகர், துகிரும்
இ. பட்டினும், மயிரினும் ஈ.நூலினும், அகிலும்
4. இப்பாடலில் காணப்படூம் நறுமணப் பொருள் -
௮, துகிர், தூசு ஆ. ஆரம், அகில்
இ. சுண்ணம், அகில் ஈ. பட்டு, பருத்தி
5. பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்கள் -
௮. பட்டினும், கட்டு ஆ. தூசும், துகிரும்
இ. ஆரமும், அகிலும் ஈ. மயிரினும், நூலினும்
Answers
(ஆ) சிலப்பதிகாரம்
இப்பாடல் வரிகள் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன. இப்பாடல் சிலப்பதிகாரம் புகார்க் காண்டத்தில் உள்ள இந்திர விழா ஊரெடுத்த காதையில் இடம் பெற்றுள்ளது. சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகும். இது குடிமக்கள் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் மூன்று காண்டங்கள் உள்ளன. அவை புகார்க் காண்டம், மதுரை காண்டம், வஞ்சி காண்டம் ஆகியன ஆகும். இதில் முப்பது காதைகள் உள்ளன. இது கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோர் கதை பற்றி பாடுகிறது. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்பர். இது இளங்கோவடிகள் அவர்களால் இயற்றப்பட்டது ஆகும். இவர் சேர மரபைச் சார்ந்தவர் ஆவார். பண்டை காலம் தொட்டு வணிகமும் தொழில் ஒழுங்கு முறையுடன் இப்பாடலில் காட்சி படுத்தப் பட்டுள்ளன.
2. 'காருகர்- என்பதன் பொருள் -
இ. நெய்பவர்
3. பாடலில் அமைந்துள்ளன மோனைச் சொற்கள்-
(அ) பகர்வனர், பட்டினும்
இப்பாடலில் அமைந்து உள்ள மோனைச் சொற்கள் பகர்வனர், பட்டினும் ஆகியன ஆகும்.
4.இப்பாடலில் காணப்படும் நறுமண பொருள் -
(இ) சுண்ணம்,அகில்
இப்பாடலில் காணப்படும் நறுமண பொருள் சுண்ணம், அகில் ஆகியன ஆகும். சுண்ணம் என்பது நறுமண பொடி ஆகும். நறுமண பொடி விற்பவர் பற்றியும் இப்பாடலில் கூறப்படுகிறது.
5. பாடலில் அமைந்துள்ள எதுகை சொற்கள் -
(அ) பட்டினும், கட்டு.
Answer:
4th ans சந்தனம் , அகில்
Explanation:
n.