தனித்திருங்கள் விழித்திருங்கள் என்ற தலைப்பில் 10 - 12 வரிகள் எழுதவும்
Answers
Answer:
இன்று உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு தொற்றுநோய் கொரானா வைரஸாகும்.உலகமே இதன் பிடியில் சிக்கித்தவிக்கிறது. இதற்க்கு மருந்து இதுவரை கண்டறியாத நிலையில் இதனை கட்டுப்படுத்த தனித்திரு விழித்திரு என்னும் கோட்பாட்டை பயன்டுத்தி அந்த தொற்று சங்கிலியை நாம் அழிக்க வேண்டும்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தனித்திருத்தல் என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் அது சரியல்ல. தனித்திருத்தல் என்பது ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு குடும்பமும், குடும்ப உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.அது அரசியல்வாதி முதல் ஆண்டி வரை என அனைவருக்கும் பொருந்தும்."கடந்த சில தினங்களாக நாட்டின் அநேக பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசின் இந்த நடவடிக்கையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை நிபுணர்கள் மற்றும் பிற நாடுகளிலிருந்து அனுபவத்தைக் கருத்தில் கொண்டு நமக்கு அறிவுரை வழங்கப்படுகிறது."கொரோனா தொற்றுக்கு எதிராக நாம் போராட இதை நாம் செய்தே ஆக வேண்டும்.
தனித்திருங்கள் விழித்திருங்கள் என்பது நிச்சயமாக நமது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனினும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் காப்பாற்றுவதே தற்போது முக்கியம் என கருத்தில் கொண்டு தனித்திருப்போம் விழித்திருப்போம் சமூக இடைவெளியைக்கடைபிடித்து கொரோனா எனும் கொடிய அரக்கனை வெல்வோம்.
Explanation: essay