World Languages, asked by malini74, 2 months ago

கீழ்க்காணும் உரைநடையைப் படித்துணர்ந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளி​​​​​​​​​​​​​(10)

வீட்டுத்தோட்டத்தில் அழகுக்காக மட்டும் செடிகளைத் தேர்வு செய்யாமல், அதன் பயன்களையும் யோசிக்க வேண்டும். எந்த நிலத்திலும், எளிதில் வளரக்கூடிய சில மூலிகைச் செடிகளைத் தோட்டக்கலை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
​விலைவாசி உயர்வால், நகரின் மையப்பகுதிகளில் வீட்டுமனை வாங்க முடியாது. நகருக்கு வெளியில் தான் வீடு வாங்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. புதிதாக உருவாக்கப்படும் மனைப்பிரிவுகள், விவசாய நிலமாகவோ அல்லது புதர்மண்டிய பகுதிகளாகவோ இருந்திருக்கும். இத்தகைய நிலங்களில், மனை வாங்கும் எல்லாரும் உடனடியாக அதில் வீடுகட்டிக் குடியேறுவதில்லை சில வீடுகள் கட்டப்பட்டிருக்கும். அருகில் உள்ள பகுதிகள், புதர்களாகவும் இருக்கும்.
​புதரை ஒட்டியவீடு, வெளிப்புறச் சுற்றுச் சுவருக்குள் பாம்புகள் வெகு இயல்பாக வந்து செல்லும் யாராக இருந்தாலும், பாம்பைக் கண்டால், செயலிழந்து பதறிவிடுவர். இதற்கு ஓரே தீர்வு, வீட்டுத்தோட்டத்தில், சிறியா நங்கை செடியை வளர்ப்பது தான்.
​பாம்பை அண்டவிடாமல் செய்வதுடன், பூச்சிகள் தீண்டினால் ஏற்படும் விஷபாதிப்புகளுக்கும், சிறியா நங்கைச் செடி இலைகள் உடனடி மருந்தாகப் பயன்படுகின்றன.
​சிறியாநங்கை, பெரியநங்கை என இருவகைச் செடிகள் உள்ளன. எனினும், பெரும்பாலான இடங்களில், சிறியா நங்கையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலையில் கடுமையான கசப்புத்தன்மை உள்ளது. அதனால் இது பாம்பு, தேள் உட்பட விஷக்கடிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
​செடியிலிருந்து வரும் மென்மையான மணத்தின் காரணமாக, பாம்புகள் பெரும்பாலும் வராது. அப்படியே வந்தாலும் சிறியாநங்கையின் மணத்தை நுகர்ந்தவுடன் அவ்விடம் விட்டு ஓடியே போய்விடும்.
​சிறியா நங்கையின் இலை மற்றும் வேர்ப்பகுதிகள் மருத்துவகுணம் கொண்டவை. தோல் நோய்களுக்குச் சிறியா நங்கை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
​அரசுபண்ணை மற்றும் தனியார் தாவரப்பண்ணைகளில் சிறியா நங்கைச் செடிகள் விலைக்குக் கிடைக்கின்றன. சிறியா நங்கைச் செடியை வாங்கும் போது அதன் இலையின் ஒரு சிறிய பகுதியை கிள்ளிச் சுவைத்துப் பார்க்க வேண்டும். கசப்புத் தன்மை அதிகம் இருந்தால் அது சிறியா நங்கைதான் என அறிந்து கொள்ளலாம்.
வினாக்கள்:
1. மக்கள் நகருக்கு வெளியே வீட்டடி மனைகள் இன்று அதிகம் வாங்குவதன் காரணம் என்ன?
2. குடியிருப்புப் பகுதிகளில் நச்சுத்தன்மையுள்ள உயிரினங்கள் வராமல் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
3. சிறியா நங்கையின் மருத்துவப் பண்புகள் குறித்து எழுதுக.
4. குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் வரக் காரணம் யாது?
5. சிறியா நங்கை போன்றே மருத்துவப் பண்பு கொண்ட வேறு ஒரு மூலிகைச் செடி குறித்து இரண்டு கருத்துகள் எழுதுக.

Answers

Answered by Anonymous
2

Answer:

HII PLEASE FOLLOW ME PLEASE FOLLOW ME AND THANKS MY ANSWER AND BRAINLEST MY ANSWER PLEASE

THIS IS THE CORRECT ANSWER OKK PLZZ FOLLOW ME AND THANKS MY ANSWERS AND BRAINLEST MY ANSWER HOPE IT IS HELP U

Explanation:

வீட்டுத்தோட்டத்தில் அழகுக்காக மட்டும் செடிகளைத் தேர்வு செய்யாமல், அதன் பயன்களையும் யோசிக்க வேண்டும். எந்த நிலத்திலும், எளிதில் வளரக்கூடிய சில மூலிகைச் செடிகளைத் தோட்டக்கலை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

விலைவாசி உயர்வால், நகரின் மையப்பகுதிகளில் வீட்டுமனை வாங்க முடியாது. நகருக்கு வெளியில் தான் வீடு வாங்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. புதிதாக உருவாக்கப்படும் மனைப்பிரிவுகள், விவசாய நிலமாகவோ அல்லது புதர்மண்டிய பகுதிகளாகவோ இருந்திருக்கும். இத்தகைய நிலங்களில், மனை வாங்கும் எல்லாரும் உடனடியாக அதில் வீடுகட்டிக்

Similar questions