English, asked by ramya19061983, 1 month ago

அப்துல்கலாம் “ குறித்து 10 குறிப்புகள்​

Answers

Answered by vimaljegim
1

Explanation:

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, அக்டோபர் 15, 1931 - சூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

Abdul Kalam 2015 stamp of India.jpg

11ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர்

பதவியில்

25 சூலை 2002 – 25 சூலை 2007

பிரதமர்

அடல் பிகாரி வாச்பாய்

மன்மோகன் சிங்

துணை குடியரசுத் தலைவர்

கிருஷண் காந்த்

பைரோன் சிங் செகாவத்

முன்னவர்

கே. ஆர். நாராயணன்

பின்வந்தவர்

பிரதிபா பாட்டீல்

தனிநபர் தகவல்

பிறப்பு

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்

அக்டோபர் 15, 1931

இராமேசுவரம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா

(தற்போது இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா)

இறப்பு

27 சூலை 2015 (அகவை 83)

சில்லாங், மேகாலயா, இந்தியா

அடக்க இடம்

அப்துல் கலாம் தேசிய நினைவகம்

தேசியம்

இந்தியர்

வாழ்க்கை துணைவர்(கள்)

திருமணம் புரியவில்லை

படித்த கல்வி நிறுவனங்கள்

புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி

சென்னை தொழில்நுட்ப நிறுவனம்

தொழில்

வான்வெளிப் பொறியாளர்

சமயம்

இசுலாம்

விருதுகள்

பத்ம பூசன் (1981)

பத்ம விபூசன் (1990)

பாரத் ரத்னா (1997)

ஹூவர் பதக்கம் (2009)

என். எஸ். எஸ். வான் புரான் பதக்கம்

எழுதிய நூல்(கள்)

அக்னிச் சிறகுகள், இந்தியா 2020, பற்றவைக்கப்பட்ட மனங்கள், பொருத்தமற்ற ஆவி, Transcendence: My Spiritual Experiences with Pramukh Swamiji

கையொப்பம்

இணையம்

abdulkalam.com

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

துறை

வான்வெளிப் பொறியியல்

பணியிடங்கள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு

இந்திய விண்வெளி ஆய்வு மையம்

கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.

கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.

கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.

Similar questions