புதிய நம்பிக்கை 10 வகுப்பு பாடம் katturai
Answers
Explanation:
so here is the answer of qué
Answer:
1. முன்னுரை :
வரலாற்றில் பல மனிதர்கள் சாதனைப் படைத்து வருகிறார்கள் . பலர் மக்களுக்கு ஒற்றையடிப் பாதையிட்டு அதையே பெருஞ்சாலையாக ஆக்குகிறார்கள். கல்வி அறிவற்ற இருள் சூழ்ந்த சமுதாயத்தில் ஓராயிரம் சுடர்களை ஏற்றுகிறார்கள் . அவர்களுள் " மேரி மெக்லியோட் பெத்யூன் " என்பவரைப் பற்றி இக்கட்டுரையில் தெளிவாக காண்போம் .
2. மேரியின் குடும்பம் :
தந்தை - சாங்
தாய் - பாட்ஸி
பாட்டி , சகோதர சகோதரிகளைக் கொண்ட ஏழ்மையான குடும்பம் . காலை 5 மணி முதல் மாலை வரை உழைக்கும் கல்வியறிவில்லாத குடும்பம் .
3.மேரியின் இளமைப்பருவம் :
மேரிக்கு பதினோரு வயது . அனைத்துப் பிள்ளைகளில் மேரிஜேன் வித்யாசமானவள் . தனது தாய் அழைக்கும் போதும் , பருதி செடி பூ பூக்கும் போதும் பூவை முதலில் தான் தான் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் .
4. மேரிக்கு ஏற்பட்ட துயரம் :
மேரி தன் தாயுடன் வெள்ளை மாளிகை பென்வில்சனின் வீட்டிற்கு செல்கிறாள். அங்கே வெள்ளை குழந்தைகள் விளையாடுவதையும் ,பைண்டிங் செய்யப்பட்ட புத்தகத்தையும் பார்த்து அதை எடுத்தாள் . அப்போது வில்சனின் இளையமகள் புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி " நீ இதை எடுக்கக்கூடாது ! உன்னால் படிக்க முடியாது ! என்று கூறினாள் . இதனால் மேரி துவண்டாள் . உடனே வீட்டை விட்டு வெளியேறினார் .
5. மேரியின் முடிவு :
மேரி மனம் கசந்தாள். " நான் படிக்க வேண்டும் . நான் பள்ளிக்கூடத்திற்கு போகவேண்டும் . கடவுளே இதை எப்படியாவது நடக்க வேண்டும் . " என முடிவெடுத்து இந்த இடம் கூறுகிறாள் . " நான் படிக்க விரும்புகிறேன் " - மேரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் .
Book to read ;
6. புதிய நம்பிக்கை ;
வயலில் இருந்து பருத்திப் பொதிகை முதுகிலிருந்து இறக்கி வைக்கும்போது அறிமுகமில்லாத ஒரு பெண் தன் முன்னால் நின்று , புன்னகைத்து , " நான்தான் மிஸ் வில்ஸன்.. " உன்னைப் போன்ற குழந்தைகள் படித்தாக வேண்டும் . எவ்வளவு சீக்கிரம் வேலைகளை முடித்துவிட்டு மேயெஸ்வில்லிக்கு வருகிறாயா ? வா என்று கூறினாள் .
7. மேரியின் கனவு நனவானது :
தன் வீட்டின் மேஜை மீது இருந்த பைபிளை எடுத்து நான் இதைப் படித்து விடுவேன் எனது கனவு கண்டாள் . மேரிக்கு சிலேட் , சாக்பீஸ் சாம் வாங்கிக் கொடுத்தார் . தான் கற்றுக் கொண்டு வந்து கோதர சகோதரிகளுக்கும் சொல்லித் தருவேன் என்ற உறுதியோடு , மகிழ்ச்சியோடு ஐந்து மைல்கள் நடந்து மேயெஸ்வில்லிக்குச் சென்றாள் .
8. பள்ளிப்படிப்பு :
மேரி தனது பள்ளியில் புதிது புதிதாக கற்றுக் கொண்டு வந்தாள் . தனது பாதையில் உயர உயர போய்க்கொண்டிருக்கிறோம் என்று மனதில் அசை போடுவாள்....!
9. பட்டமளிப்பு விழா :
மேரியின் மக்களுக்கு முதன்முதலில் பட்டமளிப்பு விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது . மதிப்புமிக்க வெள்ளைத்தாள் சுருள்களில் ,
" இந்தப் பட்டம் பெறும் மாணவர்கள் எழுதவும் படிக்கவும் கூடியவர்கள் " என்று எழுதப்பட்டிருக்கும் . மேரி தன்னுடைய டிப்ளொமாவை வாஞ்சையுடன் பெற்று நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள் .
10. மேரியின் மேல்படிப்பு :
மேரிஜேன், மேரியை அணைத்தபடி இப்போது நீ என்ன செய்யப் போகிறாய் ? என்றார் . "மிஸ் , நான் என்னுடைய படிப்பைத் தொடர விரும்புகிறேன் " என்றாள் .
11. மேரியின் மேல்படிப்பு :
மீண்டும் பருத்திக் காட்டில் வேலைக்குத் திரும்பினாள் . அப்போது மிஸ் வில்சன் அங்கு வந்து , " ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பின குழந்தையின் படிப்பிற்காக பணம் அனுப்பியிருக்கிறார் . அதை பெறுவதற்குரிய ஆளாக நீதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய் . டவுனுக்குப் போக வேண்டும் தயாராகு " என்றார் .
12. தொடர் வண்டிப் பயணம் :
குடும்பத்தாரும் அக்கம்பக்கத்தவரும் தெருவில் சிலரும் குழுவாக சேர்ந்து ரயில் நிலையத்தை அடைந்தனர் . அங்கே மிஸ் வில்சன் மேரியை அணைத்து செல்லவேண்டிய இடம் , சந்திக்க வேண்டிய ஆசிரியர் பற்றிய குறிப்புகளை விளக்கினார் . அனைவரும் மேரியை பெருமிதத்தோடு வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்கள் .
" குட் பை மேரி " , " குட் பை "
" வெற்றி உண்டாகட்டும் "
" குட் பை மேரி " வாழ்த்தொலிகள் வந்துகொண்டே இருந்தன . எனக்காக மகேஷ் சாதனை படைப்போம் கையசைத்து விடைபெற்றாள் . ரயில் வேகமெடுத்தது .
13. முடிவுரை :
மேரி கறுப்பினத்தின் சாதாரணப் பெண்ணாக பிறந்து தனது முயற்சியாலும் பலரது உதவியாலும் " உனக்குப் படிக்கத் தெரியாது " என்ற வார்த்தையை உடைத்தெறிந்து சாதித்தாள் . மேரியைப் போலவே அவமானங்களை எளிதாகக் கடந்து வெற்றிப் படிகளில் ஏறி சாதனை புரிவோம்..