1565ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் கூறு?
Answers
Answered by
0
1565 ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகள்
- 1565 ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்தியாவில் நாயக்க அரசுகள் சுயாட்சி பெற்றவையாக திகழ்ந்தன.
- நாயக்கர்கள் தவிர மற்ற பகுதிகள் உள்ளூர் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.
- அத்தகைய ஆட்சியாளர்களில் முக்கியமானவரான இராமநாதபுரம் அரசின் சேதுபதி தன்னை சுதந்திர அரசராக நிலைநிறுத்த விரும்பினார்.
- இந்த அரசுகள் தங்களுக்குள் மேலாதிக்கத்தினை நிறுவ போரில் ஈடுபட்டன.
- பழவேற்காடு மற்றும் சாந்தோம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள பகுதிகளை கோல்கொண்டா படைகள் கைப்பற்றின.
- கிழக்கு கடற்கரையில் பல பகுதிகளின் உரிமைகளை ஆங்கிலேயர்களும் டச்சுக்காரர்களும் பெற்றனர்.
- டச்சுகாரர்கள் பழவேற்காட்டில் ஒரு கோட்டையையும், 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையையும் கட்டினர்.
Similar questions