வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படைத்ததாக வளர்ந்த அரசு _______ ஆகும். அ) கோசலம் ஆ) அவந்தி இ) மகதம் ஈ) குரு
Answers
Answered by
1
மகதம்
மகாஜனபதங்கள்
- மக்களை ஆண்ட பிரதேச முடியரசுகள் உருவானதை பிரதிபலிப்பதாக மகா ஜனபதங்கள் உள்ளன.
- ஒரு நாட்டின் முக்கிய கூறுகளான நிலம், மக்கள், அரசாங்கம், இறையாண்மை போன்றவை மகாஜனபதங்களில் காணப்பட்டன.
- மகா ஜனபத அரசிற்கு அரசர் தலைமை தாங்கினார்.
- அவருக்கென மையப்படுத்தப்பட்ட ஒரு நிர்வாகம் உதவிபுரிய இருந்தது.
- இறையாண்மை உள்ள ஆட்சியாளராக அரசர் விளங்கினார்.
- புராண, பெளத்த, புத்த சான்றுகளின்படி 16 மகாஜனபதங்கள் உள்ளன.
16 மகாஜனபதங்கள்
- காந்தாரம்
- காம்போஜம்
- அசகம்
- வத்சம்
- அவந்தி
- சூரசேனம்
- சேதி
- மள்ளம்
- குரு
- பாஞ்சாலம்
- மத்ஸ்யம்
- வஜ்ஜி (விரஜ்ஜி)
- அங்கம்
- காசி
- கோசலம்
- மகதம்
- வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படைத்ததாக வளர்ந்த அரசு மகதம் ஆகும்.
Attachments:
Similar questions