India Languages, asked by nikiniki2111, 6 months ago

16. வணிகத் தொடர்பின் ஊடகங்களைப் பற்றி விளக்குக.​

Answers

Answered by shristipal
5

Answer:

பொது ஊடகம் (mass media) என்பது, பெருமளவு மக்களைச் சென்றடைவதற்காக பேரமைவுத் தொடர்பாடல் வழியாக அமைக்கப்படும் பல்வேறு ஊடகத் தொழில்நுட்பங்களின் தொகுப்பைக் குறிக்கும். இந்தத் தொடர்பாடல் நிகழ்வில் பல வெளியீட்டு முனையங்கள் அமையும்.

ஒலிபரப்பு ஊடகம் திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, மெல்லிசை ஆகியவற்றின் வாயிலாக தகவலை மின்னனியலாகச் செலுத்துகின்றன. இலக்கவியல் ஊடகம், இணையம், நகர்பேசித் தளங்கள் ஆகிய இருவகை பொதுத் தொடர்பாடலைக் கையாள்கிறது. இணையம் வழியிலான ஊடகங்களாக மின்னஞ்சல், சமூக ஊடகம் சார்ந்த இணையதளங்கள், வலைத்தளங்கள், இணையவழி வானொலி, தொலைக்காட்சிகள் ஆகியன அமைகின்றன. பிற பல பொது ஊடகங்களின் வெளியீட்டு முனையங்கள் கூடுதலாக இணைய வலைத்தளங்களிலும் தோன்றுகின்றன. இவ்வகையில் இணையத்................

Answered by deepikamr06
0

Answer:

மக்கள் ஊடகம்

மொழி

Download PDF

கவனி

தொகு

பொது ஊடகம் (mass media) என்பது, பெருமளவு மக்களைச் சென்றடைவதற்காக பேரமைவுத் தொடர்பாடல் வழியாக அமைக்கப்படும் பல்வேறு ஊடகத் தொழில்நுட்பங்களின் தொகுப்பைக் குறிக்கும். இந்தத் தொடர்பாடல் நிகழ்வில் பல வெளியீட்டு முனையங்கள் அமையும்.

ஒலிபரப்பு ஊடகம் திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, மெல்லிசை ஆகியவற்றின் வாயிலாக தகவலை மின்னனியலாகச் செலுத்துகின்றன. இலக்கவியல் ஊடகம், இணையம், நகர்பேசித் தளங்கள் ஆகிய இருவகை பொதுத் தொடர்பாடலைக் கையாள்கிறது. இணையம் வழியிலான ஊடகங்களாக மின்னஞ்சல், சமூக ஊடகம் சார்ந்த இணையதளங்கள், வலைத்தளங்கள், இணையவழி வானொலி, தொலைக்காட்சிகள் ஆகியன அமைகின்றன. பிற பல பொது ஊடகங்களின் வெளியீட்டு முனையங்கள் கூடுதலாக இணைய வலைத்தளங்களிலும் தோன்றுகின்றன. இவ்வகையில் இணையத் தொலைக்காட்சி விளம்பரங்கள், திறந்தவெளியில் QR குறிமுறைகளைப் பகிர்தல், அச்சு ஊடகத்தில் இருந்து இணையவழியாக நகர்பேசியுடன் இணைதல் ஆகியன உள்ளடங்கும். இம்முறையில், இவை இணையச் சேவையின் அணுகுதிறத்தயும் பரப்பல்திறமைகளையும் பயன்கொள்ளமுடிகிறது. இதனால், தகவலை உலகமெங்கும் பல வட்டாரங்களுக்கு மலிவாகவும் விரைவாகவும் ஒலிபரப்பமுடிகிறது. திறந்தவெளி ஊடகங்கள் (Outdoor media) பல்வேறுவகைகளில் தகவலைப் பரப்பமுடிகிறது. இவ்வகையில் மெய்நிகர் விளம்பரங்கள்; குறும்பலகைகள்; இயங்கும் வீச்சுவரிகள்; பறக்கும் குறும்பலகைகள் ( வரிசையான வானூர்திக் குறிகள்); உள், வெளிப் பேருந்துப் பலகைகள், வணிகக் கட்டிடங்கள், கடைகள், விளையாட்டு அரங்குகள், சாலைச் சீருந்துகள், or தொடர்வண்டிகள்; குறிப்பலகைகள்; வானெழுதல் ஆகிய ஊடகங்கள் அடங்குகின்றன.[1] அச்சு ஊடகங்கள் (Print media) தகவலை நூல்கள், நகைத்துணுக்குகள், இதழ்கள், செய்திதாள்கள், குறுநூல்கள், படங்கள் ஆகியவற்றால் பரப்புகின்றன.[2] நிகழ்ச்சி ஏற்பாடு செய்தலும் மேடைப்பேச்சும் கூட பொது ஊடகங்களே ஆகும்.[3]

இந்தத் தொழில்நுட்பங்களைக் கட்டுபடுத்தும் நிறுவனங்களாகிய திரைப்படக் கூடங்கள், பதிப்பக்க் குழுமங்கள், வனொலி நிலையங்கள், தொலைக்காட்சி நிலையங்கள் ஆகிய்வையும் பொது ஊடகங்கள் எனப்படுகின்றன.[4][5]

நாடுதழுவிய வானொலி சேவைகள், நாளேடுகள், இதழ்கள் அல்லது தாளிகைகள்கள் ஆகியவற்றின் அறிமுகத்தோடு, 1920 களில் பொது ஊடகம்(mass media) என்னும் கருத்துரு பயன்படத் தொடங்கியது. பொது ஊடகம் என்று சொல்லத்தக்க புத்தகங்கள் போன்றவை, இக்கருத்துரு உருவாவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே உள்ளன. இவை அனைத்துமே ஓரிடத்தில் சிறு குழுவினர், செய்தியையோ தகவலையோ தொகுத்து, மறுமுனையில் பெருமளவிலான மக்களுக்கு வழங்கும் ’ஒருமுனைய’ ஊடக வகையைச் சேர்ந்தவை. தற்காலத்தில் இணைய நுட்ப வளர்ச்சியின் விளைவாக, பொது ஊடகத்தின் தன்மையே, வியக்கத்தக்கவாறு மாறி உள்ளது. மரபார்ந்த செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றுக்கு இணையான தாக்கத்தை, இணையத்தின் வழியாக புது ஊடகமும் செய்யக்கூடியதாகி இருக்கிறது. படிப்பவராகவும் கேட்பவராகவும் இருந்துவந்தவர்கள், ஊடகப் பயனீட்டாளர்கள் ஆகி, இப்போது அவர்களே செய்தியை வழங்குவோராகவும் தவறாக வெளியிடப்படும் செய்தியை அவ்வப்போது குறிப்பிட்டுச் சரிசெய்யவும் சாத்தியம் உருவாகியிருக்கிறது. இதனால், ஒரு முனை ஊடகம் இருமுனை ஊடகமாக மாறியிருக்கிறது.

Similar questions