17. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answers
Answered by
12
உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும், உயிர் மெய் எழுத்துக்களும், ஆய்த எழுத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தமக்கு உரிய மாத்திரையை விட குறுகி அல்லது நீண்டொலித்தல் சார்பெழுத்துக்கள் எனப்படும்
Answered by
5
பத்து வகைப்படும். உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை , குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் , ஆய்தக்குறுக்கம்.
Step-by-step explanation:
- உயிர்மெய் : உயிர் மெய் - உயிர் + மெய் 12 x 18 -216
குறில் உயிர்மெய் - 90, நெடில் உயிர்மெய் - 126.
- ஆய்தம்: அஃகேனம், தனிநிலை முப்பாற்புள்ளி, முப்புள்ளி.
- உயிரளபெடை: உயிர் ஓசை அளபெடுப்பது, உயிர் இரட்டிப்பது. நெடில் அளபெடுத்து அதன் அருகில் குறில் வரும் மூன்று மாத்திரை பெறுவது.
- ஒற்றளபெடை:மெய்யெழுத்து இரட்டிப்பது தனிக்குறிலை அடுத்தோ. இருகுறிலை அடுத்தோ ஒற்று அளபெடுக்கும்.
- குற்றியலிகரம்: குறுகி ஒலிக்கும் இகரம் தனிமொழி
மியா என்னும் அசைச்சொல் கேண்மியா. சொன்மியா
- குற்றியலுகரம்: குறைந்து ஒலிக்கும் வல்லின உகரம்
கு.சு.டு.து.பு.று சொல்லின் இறுதியில் வரும்.
- ஐகாரக்குறுக்கம்: சொல்லின் முதல், இடை, கடையில் வருகையில் இரு மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும் ஐகாரம்.
- ஒளகாரக்குறுக்கம்: சொல்லின் முதலில் வரும் ஒள குறுகி ஒலிப்பது. இரு மாத்திரை - ஒரு மாத்திரை ஆவது. ஒளவையார், வௌவால்.
- மகரக்குறுக்கம்: மகரம் என்னும் சொல் ம் என்னும் எழுத்தை குறிக்கும்.
- ஆய்தக்: ம் - தனக்குரிய அரை மாத்திரையில்லிருந்து குறைந்து ஒளிப்பது மகரக்குறுக்கம் எனப்படும்.
Similar questions