1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கான காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்
Answers
Answered by
0
1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கான காரணங்கள்
- சர் ஜான் கிரடாக் அறிமுகம் செய்த புதிய இராணுவ விதிமுறையின் அடிப்படையில் புதிய வகை தலைப்பாகையின் அறிமுகம், சீருடையில் இருக்கும் போது இந்திய வீரர்கள் சாதி அடையாளங்களையோ அல்லது காதணிகளையோ அணியக்கூடாது என்ற வற்புறுத்தப்பட்டது முதலியன புரட்சிக்கு காரணமாக அமைந்தது.
- 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக அரியணையை இழந்த அரசர்கள், குறுநில மன்னர்களின் சந்ததியினர், திப்பு மகன்களின் பிரதிநிதிகள், விசுவாசிகள் ஆகியோர் வேலூரில் நடத்திய கிளர்ச்சியே வேலூர் கலகம் ஆகும்.
புரட்சியின் போக்கு
- 1806 ஜூலை 10ல் 23ம் படைப்பிரிவினை சார்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
- கலகத்தில் கர்னல் பான்கோர்ட் , கர்னல் மிகேரஸ் ஆகியோர் கொல்லப்பட்னர்.
- கில்லெஸ்பி வன்முறை மூலமாக புரட்சியை அடக்கினார்.
- திப்புவின் மகன் கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டார்.
- படைத்தளபதியும், சென்னை ஆளுநரும் இங்கிலாந்திற்கு திரும்ப அழைக்கப்பட்டனர்.
Similar questions