1857ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பின்விளைவுகள் குறித்து விரிவாக ஆராயவும்.
Answers
Explanation:
இந்த கதை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று சொல்கிறார் பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் கிம் வாக்னர்.
டாக்டர் கிம் வாக்னர் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் காலகட்டம் தொடர்பான வரலாற்றை போதிக்கிறார்.
2014 ஆம் ஆண்டில், கிம் வாக்னருக்கு வந்த மின்னஞ்சலில் தங்களிடம் ஒரு மண்டை ஓடு இருப்பதாகவும், அதை என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் ஒரு தம்பதியினர் குறிப்பிட்டிருந்தார்கள்.
லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்த மண்டையோட்டில் கீழ்த்தாடை இல்லை, பற்கள் உதிரும் நிலையில் உள்ளன.
மண்டை ஓட்டின் கண்களின் பின்புறம் இருக்கும் குழியில் கையால் எழுதப்பட்ட குறிப்பு இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.
அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது இதுதான்:
வங்காள காலாட்படையின் 46வது ரெஜிமெண்ட்டின் ஹவில்தார் ஆலம் பேக்கின் மண்டையோடு இது. இவர் பீரங்கியால் சுடப்பட்டு இறந்தார். அலம் பேக்கைப் போன்றே ரெஜிமெண்ட்டின் பிற ஹவில்தார்களும் கொல்லப்பட்டார்கள்.
1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க் கலகத்தின் முக்கிய தலைவராக இருந்த ஆலம் பேக் கோட்டையை நோக்கிச் செல்லும் பாதையை கைப்பற்றினார். கிளர்ச்சியில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஐரோப்பியர்கள் அந்தக் கோட்டைக்குதான் அடைக்கலம் தேடிச் சென்றார்கள்.
டாக்டர் கிரஹாம் குடும்பத்தாருடன் வண்டியில் சென்றுக் கொண்டிருந்தபோது, அவருடைய மகளின் எதிரிலேயே ஆலம் பேக் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சுட்டுக் கொன்றார்கள். அவர்களது அடுத்த இலக்கு மதபோதகரான ரெவரண்ட் மிஸ்டர் ஹண்டர். ரெவரண்ட் ஹண்டர் தனது மனைவியுடன் அந்த பாதையில் சென்றுக் கொண்டிருந்தார்.
ஹண்டரையும் அவர் மனைவியையும் மகள்களையும் கொடுமைப்படுத்தி கொன்று சாலையோரத்தில் வீசியெறிந்தார் ஆ லம் பேக்.
ஐந்து அடி ஏழரை அங்குல உயரம் கொண்டவரான ஆலம் பேக்கிற்கு 32 வயது இருக்கும். நல்ல திடக்காத்திரமான உடல்வாகு கொண்ட அவரின் மண்டையோடு கேப்டன் ஏ.ஆர் கோஸ்டேலோ (7வது Drag. Guard) மூலம் இங்கு கொண்டுவரபட்டது. அலம் பேக் பீரங்கியால் சுடப்பட்டபோது கோஸ்டேலோ அந்த இடத்தில் இருந்தார்
1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள்
ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை
மேலதிகாரக் கொள்கை
- உள் நாட்டு ஆட்சியாளர்கள் ஊழல்வாதிகள் மற்றும் திறமை இல்லாதவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் பிரிட்டிஷ் அரசில் இணைக்கப்பட்டது.
வாரிசு இழப்புக் கொள்கை
- அரசுக்கட்டிலில் தமக்கு பிறகு அரியணை ஏற ஆண் வாரிசினை பெற்றெடுக்காத உள்நாட்டு ஆட்சியாளரின் நிலம் அவரது இறப்பிற்கு பிறகு பிரிட்டிஷ் அரசில் இணைக்கப்பட்டது.
கலாச்சார உணர்வினை அவமதித்தல்
- மதக் குறியீடுகள் தடை செய்யப்பட்டது.
- புதிய தலைபாகை அணிய கட்டாயப்படுத்தப்பட்டது.
- வீரர்கள் தர குறைவாக நடத்தப்பட்டனர்.
- பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவிய தோட்டாக்கள் மற்றும் விலங்கு தோலினால் செய்யப்பட்ட உறைகளை பயன்படுத்த மறுத்த சிப்பாய்களின் எழுச்சியினால் சிப்பாய்கள் கலகம் உருவானது.
பின்விளைவுகள்
- இந்தியா பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தினால் நேரடியாக ஆட்சிச் செலுத்தப்படும் பிரிட்டிசின் காலனியாக மாறியது.
- பாரம்பரிய நிறுவனங்கள் மற்றும் மதம் தொடர்பான விஷயங்களில் ஆங்கிலேய அரசு இனி தலையிடாது என விக்டோரியா மகா ராணி தெரிவித்தார்.
- அரசுப் பணிகளில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர்.