1857ஆம் ஆண்டின் கிளர்ச்சி அ) 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சி ஏற்படக் காரணமாக அமைந்த நிகழ்வில் தனது அதிகாரியை தாக்கியவர் யார்? ஆ) தில்லியில் ஷாஹின்ஷா இ-ஹிந்துஸ்தான் என்று அழைக்கப்பட்டவர் யார்? இ) 1857ஆம் ஆண்டின் கொடுமைகளை பற்றிய செய்தியை லண்டன் டைம்ஸ் நாளேட்டில் வெளியிட்ட பத்திரிகையாளர் யார்? ஈ) அரசியின் பேரறிக்கையில் சமயம் த�ொடர்பான விஷயங்கள் பற்றி என்ன கூறப்பட்டது?
Answers
Answered by
0
1857ஆம் ஆண்டின் கிளர்ச்சி
- 1857 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது ஐரோப்பிய அதிகாரியைத் தாக்கினார்.
- இந்த நிகழ்வு 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சி ஏற்படக் காரணமாக அமைந்தது.
- தில்லியில் ஷாஹின்ஷா இ-ஹிந்துஸ்தான் என்று அழைக்கப்பட்டவர் முகலாய மாமன்னர் இரண்டாம் பகதூர் ஷா ஆவார்.
- 1857ஆம் ஆண்டின் கொடுமைகளை பற்றிய செய்தியை லண்டன் டைம்ஸ் நாளேட்டில் வெளியிட்ட பத்திரிகையாளர் வில்லியம் ஹோவர்ட் ரஸ்ஸல் ஆவார்.
- இந்திய மக்களுக்கு விக்டோரியா மகா ராணி செய்த அறிவிப்பில், பாரம்பரிய நிறுவனங்கள் மற்றும் மதம் தொடர்பான விஷயங்களில் ஆங்கிலேய அரசு இனி தலையிடாது என தெரிவித்தார்.
- இதுவே அரசியின் பேரறிக்கையில் இருந்த சமயம் தொடர்பான விஷயங்கள் ஆகும்.
Similar questions
English,
4 months ago
Computer Science,
4 months ago
Hindi,
8 months ago
Math,
11 months ago
Social Sciences,
11 months ago
Biology,
11 months ago