1857 ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை?
Answers
இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது[2]. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர்[3]. ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது[2]. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது.
சிப்பாய்க் கிளர்ச்சி, 1857
இந்திய விடுதலைப் போராட்டம் பகுதி
Indian Rebellion of 1857.jpg
1857 இல் இடம்பெற்ற பெரும் கலகத்தைக் காட்டும் 1912 வரைபடம். கலகம் இடம்பெற்ற நகரங்கள்: மீரட், டெல்லி, கான்பூர், லக்னௌ, ஜான்சி, குவாலியர்.
நாள் மே 10, 1857
இடம் இந்தியா (cf. 1857) en:Image:Indian revolt of 1857 states map.svg
கலகம் அடக்கப்பட்டது,
இந்தியாவில் கம்பனியின் ஆட்சி முடிவு
பிரித்தானிய முடியாட்சியின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது.
நிலப்பகுதி
மாற்றங்கள் முன்னாள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்ட வட்டாரங்களை உள்ளடக்கிய இந்தியப் பேரரசு, சில இடங்கள் உள்ளூர் அரசர்களிடம் ஒப்படைக்கப்பட்டன, எஞ்சிய இடங்கள் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.
பிரிவினர்
British East India Company flag.svg பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள்,
7 இந்திய சிற்றரசுகள்,
தனியாட்சிப் பகுதிகளான ஆவாட் மற்றும் ஜான்சி ஆகியவற்றின் வெளியேற்றப்பட்ட அரசர்கள்
சில பொது மக்கள்.
ஐக்கிய இராச்சியம் பிரித்தானிய இராணுவம்
British East India Company flag.svg பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் Native Irregulars and British regulars, பிரித்தானிய தன்னார்வலர் படைகள்
20 சிற்றரசுகள் (நேபாளம், காஷ்மீர் உட்பட.
தளபதிகள், தலைவர்கள்
இரண்டாம் பகதூர் ஷா
நானா சாகிப்
மிர்சா முகல்
பாக்த் கான்
இராணி இலட்சுமிபாய்
தாந்தியா தோபே
பேகம் ஹஸ்ரத் மகால்
இந்தியத் தளபதி:
ஜோர்ஜ் ஆன்சன் (மே 1857 வரை)
சர் பாட்ரிக் கிராண்ட்
சர் கொலின் காம்பல் (ஆகஸ்ட் 1857 முதல்)
ஜங் பகதூர் ராணா [1]
1857 ஆண்டு புரட்சியின் விளைவுகள்
1857 ஆம் ஆண்டு புரட்சி
- 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது கல்கத்தாவிற்கு அருகில் உள்ள பாரக்பூரில் மங்கள் பாண்டே தன் இராணுவ மேலதிகாரியை சுட்டுக் கொன்றார்.
- பெருங்கிளர்ச்சியின் போது நானா சாகிப் கான்பூரிலும், ராணி லட்சுமிபாய் ஜான்சியிலும் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
1857 ஆம் ஆண்டு புரட்சியின் விளைவுகள்
- 1857 ஆம் ஆண்டு புரட்சி அடக்கப்பட்ட பிறகு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவிற்கு வந்தது.
- இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணியின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இந்தியாவின் ஆட்சி கொண்டு வரப்பட்டது.
- இந்திய தலைமை ஆளுநர் அரசப் பிரதிநிதி அல்லது வைஸ்ராய் என அழைக்கப்பட்டார்.
- அந்த வகையில் முதல் வைஸ்ராயாக கானிங் பிரபு நியமிக்கப்பட்டார்.