19. தமிழ்மொழியின் வரிவடிவ வளர்ச்சி குறித்து ஒரு பக்க அளவில் கட்டுரை வரைக
(குறிப்பேட்டில் எழுதுக)
Answers
Answer:
மனித சமுதாயம் வளர்ச்சியடைவதற்கு மொழி முக்கியமானது மனித சமுதாயத்தில் பேச்சுமொழி, எழுத்துமொழி என இருவகையுண்டு உலகில் பெரும்பலான மொழிகள் எழுத்து வடிவம் பெற்றிருக்கவில்லை சிறுபான்மை மொழிகளே வரிவடிவம் பெற்றமொழிகளாக உள்ளன ஒரு மொழியின் செம்மையான வளர்ச்சியே வரிவடிவக் கண்டுபிடிப்பாகும். ஒரு சமூகத்தால் உச்சரிக்கப்படுகின்றன அல்லது பேசப்படுகின்றன சகல ஒலிவடிவங்களுக்கும் ஏதோ ஒரு அடையாளத்தைக் கொடுப்பதே வரி வடிவாகும்.
இன்று வரையில் இனங்காணப்பட்டுள்ள 25 திராவிட மொழிகளில் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளுக்குத்தான் எழுத்து வடிவம் உண்டு எனவே பேச்சுமொழியினை வரிவடிவில் காட்டுவதுதான் எழுத்து மொழி என இன்று கூறாது எழுத்து மொழிக்குரிய முக்கிய பண்பு நாடுகடந்து காலம்கடந்து நிற்கின்ற பண்பாகும். ஒரு இனத்தின் பண்பாடும் அறிவும் கலாசாரமும் நாகரிகமும் அவ் இனத்தின் எழுத்து மொழியால் பொதிந்து கிடக்கிறது. எழுத்து மொழி இல்லையேல் மனித வாழ்வின் தொடர்ச்சியான முன்னேற்றம் இருக்காது.
எழுத்துருவம் பெற்றமொழிகளே நாகரீக மொழிகள் என்றும் சிறந்த மொழிகள் என்றும் கருதப்படுகின்றது. திராவிட மொழிகளிலே தமிழ் மொழிகளிலே மிகப் பழமையான எழுத்துருவத்தைக் காணமுடியும் தெலுங்கு மொழியின் எழுத்துருவம் கி.பி 7ம் நூற்றாண்டிலும் கன்னடக மொழியின் எழுத்துருவம் கி.பி 5ம் நூற்றாண்டிலும் மலையாள கால மொழியின் எழுத்துருவம் 4ம் நூற்றண்டிலும் தோன்றியதென ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்திய மொழியின் தமிழும், சமஸ்கிருதமும் சமகாலத்தில் எழுத்துருவை ஆக்கிக்கொண்டன என கூறப்படுகின்றன.
இன்று ஆங்கில மொழி அணைத்துலக மொழியாக இருந்தாலும் கிரேக்கமும், இலத்தீனும் தான் உலகத்தில் மிகப் பழமையான மொழி எனக் குறிப்பிடுகிறது. உலகத்தின் பல்வேறு நாகரிகங்கள் இருப்பது போல இன்றைய உலகில் பல்வேறு வகையான எழுத்து முறை உள்ளன.
Answer:
தமிழ் வரி வடிவ வளர்ச்சி குறித்து ஒரு பக்க அளவில் ஒரு பக்க அளவில் எவ்வளவு பக்க அளவில்