சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு
ஏதேனும் மூன்றுகாரணிகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்தபுரட்சிக்கு ஏதேனும் மூன்றுகாரணிக ள்
• மஞ்சு வம்சத்தின் சிதைவு 1908 ஆம் ஆண்டு பேரரசின் பாதுகாவலராயிருந்த பேரரசியார் தாவேகரின் மரணத்தோடுத் துவங்கியது. புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்படலாயினர்.
• உள்ளூர் இராணுவ கிளர்ச்சி 1911ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மட்டங்களில் பரவியது. மாகாண ஆளுநர்கள் மஞ்சு அரசின் பிரதிநிதித்துவங்களை உதறித்தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தலாயினர். இக்காலக் கட்டத்தில் நடுத்தர வர்க்கத்திலிருந்து சில தலைவர்கள் உருவாகி யிருந்தனர்.
• சீனாவில் ஏற்பட்ட எழுச்சியைப் பற்றி அமெரிக்க நாளிதழ்களின் மூலமாக அறிந்து கொண்ட டாக்டர் சன் யாட் சென் ஷாங்காய் நகரை வந்தடையந்ததும் அங்கே அவர் சீனக் குடியரசின் தற்காலிக குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Chemistry,
1 year ago