2. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?அ) தேசியத் திறனறித் தேர்வு ஆ) ஊரகத் திறனறித் தேர்வு
Answers
Answer:
ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் உயர் படிப்பறிவு அடைவினைக் கொண்டுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கி உயர்கல்வியினைத் தொடர்ந்து கற்க உதவுதல்.
தேர்வுத்தேதி ஆகஸ்ட் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை தகுதி மாணவர் குடியிருக்கும் பகுதியும் அவன் பயிலும் பள்ளிக்கூடமும் ஊரகப் பகுதியில் அமைந்திருக்க வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளைத் தவிர அரசால் அங்கீகரிக்கப்பட்ட கிரமப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் . (சென்னை மற்றும் புதுச்சேரி தவிர) 8ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுத் தற்போது 9ஆம் வகுப்பு பயின்றுவரும் மாணவர்கள் பெற்றோரது மாத வருமானம் ரூ.150000க்கு மிகாமல் இருக்கவேண்டும்
தேர்வுக்கட்டணம் தேர்வுக்கட்டணமாக ரூ.7/-ஐ ரொக்கமாகச் செலுத்த வேண்டும். அரசின் முடிவுகளுக்குட்பட்டு தேர்வுக்கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் / முதல்வர் விண்ணப்பங்களைப் பெற்றுத் தகுதியுள்ள மாணவர்களுக்கு வழங்கவேண்டும். வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்றிதழைத் தலைமையாசிரியர் மேலொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு நுழைவுச் சீட்டுப் பெறும் முறை தேர்வு நுழைவுச் சீட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தேர்வு முடிவுகள் மற்றும் உதவித் தொகை தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களது மதிப்பெண்கள் கணினி மூலம் வரிசைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலிருந்தும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகளுக்குப் பள்ளிக் கல்வித்துறை மூலமாகக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை அதே வகுப்பில் தக்கவைத்தாலோ அல்லது இடைநின்றாலோ உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்படும். உதவித்தொகை ஆண்டுக்கு ரூபாய் 1000/-
தமிழகப்பள்ளிகளில் அறிவும் திறமையும் ஆற்றலும் படைத்த பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுடைய திறமைகளை மேன்மேலும் மலரச் செய்யும் வகையில் இத்தகைய தேர்வுகள் பற்றிய விவரங்களை அறியும் வகை செய்து அவர்களை அகில இந்திய அளவிலும் உலக அரங்கிலும் சாதனை படைக்க அனைத்துப் பள்ளிகளும் முயற்சி மேற்கொள்வது சாலச்சிறந்தது.
கற்றல் விளைவுகள் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் அனைவரும் தேசியத்திறனாய்வுத் தேர்வில் கலந்துகொள்ளவேண்டும் என்ற முனைப்பினை ஏற்படுத்துதல் வறுமை காரணமாக மேற்படிப்பைத் தொடராமல் இருந்தால்கூட திறமை இருந்தால் தொடரலாம் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் உருவாக்குதல். அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை மனதளவில் தயார்படுத்துவதற்கு அடித்தளமாக இத்தேர்வு அமையும் என்பதை உணருதல். கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு, வருவாய் மாவட்ட வாரியாக உதவித்தொகை வழங்கி ,மாணவர்களது தன்னம்பிக்கையை அதிகப்படுத்துதல்.
☺️☺️☺️✌✌....
Answer:
ஆ) ஊரகத் தேர்வு
Explanation:
pls mark me as brainliest answer