India Languages, asked by anjalin, 9 months ago

2. கூற்று: டயாபடீஸ் மெல்லிடஸ் நோயாளிகளின் சிறுநீரில் அதிகளவு குளுக்கோஸ் வெளியேறுவதைக் காணலாம். காரணம்: கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரப்பதில்லை.

Answers

Answered by steffiaspinno
0

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்  

  • கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்க‌ம் ஆகு‌ம்.  

விள‌க்க‌ம்  

  • கணையம் போதுமான அளவு இன்சுலினை சுர‌ப்ப‌தி‌‌ல் ஏ‌ற்படு‌ம் குறைபா‌ட்டி‌ன் காரணமாக ஒருவரு‌க்கு டயாபடீ‌ஸ் மெ‌லி‌ட‌‌ஸ் எ‌ன்னு‌ம் ‌நீ‌ரி‌ழிவு நோ‌ய் உருவா‌கிறது.
  • டயாபடீ‌ஸ் மெ‌லிட‌ஸ் எ‌ன்னு‌ம் ‌நீ‌ரி‌ழிவு நோ‌ய் ஆனது ஒருவரு‌க்கு வள‌ர்‌‌சிதை மா‌ற்ற‌க் குறைபாடு, அ‌திக உட‌ல் எடை, குறை‌ந்த உழை‌ப்பு, அ‌திக கொழு‌ப்பு ம‌ற்று‌ம் இ‌னி‌ப்பு உ‌ள்ள உணவுகளை எடு‌த்து‌க் கொ‌ள்ளுத‌ல் முத‌லிய காரண‌ங்க‌ளினா‌ல் ஏ‌ற்படுகிறது.
  • இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் (ஹைப‌ர் ‌கிளைசீமியா), சிறுநீரில் அதிகமான குளுக்கோஸ் வெளியேறுதல் (கிளைக்கோசூரியா), அடிக்கடி சிறுநீர் கழித்தல் (பாலியூரியா), அடிக்கடி தாகம் எடுத்தல் (பாலிடிப்சியா). ம‌ற்று‌‌ம் அடிக்கடி பசி எடுத்தல் (பாலிஃபேஜியா) முத‌லியன ‌டயாபடீ‌ஸ் மெ‌லிட‌‌சி‌ன் அ‌றிகு‌றிக‌ள் ஆகு‌‌ம்.
Similar questions