India Languages, asked by raghuramansbi, 7 months ago

தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது
2. தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா காரணம் தருக​

Answers

Answered by Dɪʏᴀ4Rᴀᴋʜɪ
43

தமிழ் எனது தாய்மொழி. பள்ளி இறுதிவரை படித்ததும் தாய் மொழியில்தான். எழுதவும் பேசவும் கூடுதல் ஆசையுள்ள மொழி தமிழே.

பிற்காலப் படிப்பு முழுவதும் ஆங்கிலத்தில்.

அந்தக்கால மலையாளத் திரைப்பாடல்களைக் கேட்டு அம்மொழியின் அழகிலும்,அந்த (கர்நாடக சங்கீதம் பெருமளவில் கலந்திருந்த) இசையின் இனிமையிலும் மயங்கி, நானே சுய முயற்சியில் மலையாளம் எழுதப் படிக்கக் கற்றேன். (35 வருடங்களுக்குப்பிறகு அது எனக்கு தேவையாகிப்போகும் என்று அமைந்தது எனது சத்குருவின் சித்தம்!).

வடக்கே வேலைக்குப்போக அவசியம் வந்தால் உபயோகமாயிருக்கும் என்று நினைத்து கல்லூரி இறுதியாண்டில் மத்திய இந்தி ஆணையத்தின் தபால் வழிக்கல்வியில் இந்தி ஓரளவு படித்தேன். காதில் விழுவதன் மூலம் அற்ப அளவு வடமொழியும் ஏதோ கொஞ்சம் புரிவது போல் தோன்றுகிறது.

கணிசமாக ஓரளவேனும் தமிழ் இலக்கியங்கள், படைப்புகள் படித்திருக்கிறேன். நான் வெறும் “சென்டிமென்டு" பேர்வழி அல்ல! அதனால், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று சொல்லமாட்டேன்!

அனாதியான வேத வேதாந்தங்களையும், சாத்திரங்களையும், இதிகாச புராணங்களையும், வேதாங்கங்களையும், உபவேதங்களான ஜோதிடம்,ஆயுர்வேதம் இவற்றையெல்லாம் தன்னுள்கொண்டதும் இலக்கணம், நிருக்தம், காவியங்கள் பலதும் தன்னுள் அடங்கியதும், தேவ பாஷை என்று போற்றப்படுவதும் இதன் ஆதி காலம் எது என்று நிர்ணயிக்கப்பட முடியாததும் பல இந்திய மொழிகளுக்குத் தாயாயிருப்பதுமான சமஸ்க்கிருதமே ஆதி மொழி, தொன்மையும் செறிவும் வளமும் வீச்சும் பூரணமாய் உள்ள மொழி என்பதே என் தீர்மானமான நம்பிக்கை.

தொன்மையும், செழுமையும், இலக்கிய இலக்கணங்களும் செறிந்த தமிழ் மொழி, காலம் காலமாக அதன் உடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்த வடமொழியின் கூட்டுறவால் பெரிதும் செம்மையுற்றது என்பதே என் அசைக்கமுடியாத கருத்து. வடமொழியில் உள்ள சொற்களெல்லாம் தமிழிலிருந்து போனவை என்றெல்லாம் பேசி எழுதுபவர்களின் கருத்தை நோக்கும்போது, ராஜாஜி சொன்ன சொன்ன ஒரு உதாரணம் ஆகிய “இது, ‘போளியிலிருந்துதான் வெல்லம் வந்தது' என்று சொல்வது போல இருக்கிறது” என்பதுதான் எனக்குத் தோன்றும்.

உலகத்தில் நீண்ட காலமாய்ப் புழக்கத்தில் உள்ள எந்த மொழியும் தேவைக்கேற்ப அந்நியமொழிக் கலப்பின் மூலம் புதிய புதிய வார்த்தைகள் சேர்ந்து செறிவுறுவது இயற்கையே. ஆங்கில ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் எத்தனை சகஜமாக பிறமொழிச்சொற்களை ஏற்று அம்மொழி பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது புரியும். இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்குப் போன வார்த்தைகளின் ஒரு பெரிய தொகுப்பே நீங்கள் அதில் காணலாம்! அசந்துவிடுவீர்கள்!

ஆக, தமிழ் மொழி, வடமொழியின் நெருங்கிய உறவின் மூலமும் பிறமொழிகளில் தாக்கம் மூலமும் பெரிதும் செறிவுற்றிடுக்கிறது, அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. ஷ, ஸ, ஹ, ஜ இவையெல்லாம் தமிழில் தேவைக்கேற்ப உபயோகிப்பதில் கௌரவக்குறைவு ஒன்றும் இல்லை என்பதே என் கருத்து . நமக்கு முற்றிலும் அந்நிய மொழியான ஆங்கிலத்தில் கூட இந்த ஒலிகளைத் தர எழுத்துகளிருக்கும்போது, படு தொன்மையான தமிழில் அவை இல்லாதது தமிழ் மொழியின் அடிப்படையிலுள்ள ஒரு பலவீனமே என்பதில் எனக்கு ஒரு ஐயமும் இல்லை.

தேவையான அளவு, பிறமொழிக்கு இணையாகத் தமிழில் இல்லாத சொற்கள் உண்டாக்கப்படுவது நல்லதே என்றாலும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதான். ‘காப்பி’யே எளிதாகவும் சுவையாகவும் இருக்கும்போது “கொட்டை வடிநீர் குழம்பி" அவசியம் தானா?!

தமிழ்ப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு தமிழைப் படுத்துவது எனக்கு உடன்பாடில்லை.

தமிழர்கள் முதலில் தமிழை ஒழுங்காகப் படிக்கட்டும். ஆங்கில மோகத்தில் மூழ்கி , “எனக்கு டமில் தெர்யாதூ” என்று பிள்ளைகள் சொல்லுவதைப் பெருமையோடு பார்க்கும், அமெரிக்க டாலரையே மகாலட்சுமியாய் வணங்கும் தமிழ்ப் பெற்றோர் இல்லாது போகட்டும். “தமில் வால்க”, “தமிலே என் மூச்சு; உடல் மன்னுக்கு உசிரு தமிலுக்கு” என்று வீர வசனம் பேசுபவர்கள் முதலில் ழ,ல, ள ஒழுங்காக உச்சரிக்கட்டும். முகநூலில் பேச்சுத் தமிழில் தாராளமாய்க் கெட்ட வார்த்தைகளைக் கலந்து நரேந்திர மோதியையும், பிடிக்காத பிற அரசியல் வாதிகளையும் கேவலமாய்த் திட்டி அசிங்கமாய் எழுதும் தமிழர்கள் நாடு கடத்தப் படட்டும்! ஜல்லிக்கட்டில் இருக்கும் வெறி கொஞ்சம் தமிழ் சொற்கட்டுக்கும் வரட்டும்!

இந்த தீவிர தமிழ், எங்கும் தமிழ் எதிலும் தமிழ், வடமொழிக் கலப்பில்லாத தூய தமிழ் இவற்றிலிருக்கும் தேவையற்ற ஒரு வெறியையும், தமிழ் மொழியில் ஆழ்ந்த அறிவோ, சொல்வன்மையோ இல்லாமல் வெறுதே தமிழ் என்றாலேயே உணர்ச்சிவசப்படும் சென்டிமெண்டையும் தமிழர்கள் கொஞ்சம் ஓரம் கட்டி வைத்துவிட்டு, அடிப்படையே ஆடிப்போய்விடுமோ என்கிற நிலையில் இருக்கிற தமிழைக் கொஞ்சம் முட்டுக்கொடுத்து நிமிர்த்துவது தான் காலத்தின் கட்டாயம் என்று நான் நினைக்கிறேன்.

பின் குறிப்பு:

சொல்ல விட்டுவிட்டேனே? எனக்குப் பிடித்த மொழி மலையாளம்! காரணம், அது தமிழின் அழகும், வடமொழியின் வளப்பமும் சேர்த்து உருவாகியுள்ள ஓர் நளின மொழி! தமிழுக்கே உரித்த ழகரமும் அதில் உண்டு; வடமொழியிலுள்ள எல்லா ஒலிகளும் (ச,ஸ, ஷ, ஹ, ஜ, க்ஷ வுடன் வல்லினத்தின் ka, kha, ga, gha, cha, chha, ja, jha முதலானவற்றிற்கான) எல்லா எழுத்துக்களும் உண்டு.

மலையாள தினசரிகளில் எழுதப் படும் மலையாளம் தரமானதாகவும் ஆங்கிலக் கலப்பு மிகமிகக் குறைவாயும் உள்ளது. நான் கண்டவரை, பல மலையாளிகள், ஆங்கிலக் கலப்பு அதிகமில்லாமல் நல்ல திருத்தமான மலையாளம் எழுதவும் பேசவும் திறன் உள்ளவர்களாக இருக்கிறார்கள் (மொழிப் பற்றை அதிகம் வெளிக்காட்டும் தமிழர்களைக்காட்டிலும்!

oh u are South Indian...❣️...HOPE SO IT IS HELPFUL..PLS FOLLOW ME..✌️♥️..

Answered by shivtanu21
3

Hlo mate inbox me plz

.............

Similar questions