2.
குலசேகராழ்வார் - ஆசிரியர் குறிப்புத்
தருக.
Answers
Answered by
1
விடை:
குலசேகர ஆழ்வார் பற்றிய குறிப்புக்கள்:
கேரள மாநிலத்தில் உள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர் குலசேகர ஆழ்வார். பன்னிரு ஆழ்வாருள் ஒருவர். இவர் பாடிய பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்யபிரபந்தத்தில் முதலாயிரத்தில் உள்ளது. இதில் நூற்றைம்பது பாசுரங்கள் உள்ளன. இராமபிரான் மீது கொண்டிருந்த பக்தியால் இவர் ‘குலசேகரப் பெருமாள்' என வழங்கப் பட்டார்.
இவர் வடமொழி, தென்மொழி ஆகிய இரண்டிலும் வல்லவர். இவர் வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலையும் இயற்றியுள்ளார். திருவரங்கத்தின் மூன்றாவது சுவரை இவர் கட்டியதால் அதற்கு குலசேகரன் வீதி என்னும் பெயர் இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. இவர் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
அது ஆழ்வார் அல்லது ஆசிரியர் ?
Similar questions