தீதும் நன்றும் பிறர் தர
வாரா !
2:25
Answers
நல்ல இருக்கு
இது உண்மை தா
follow me
''தீதும் நன்றும் பிறர் தர வாரா''
இது மிக எளிமையான, அதே நேரத்தில் மிக உயர்ந்த புறநானூற்று இலக்கிய வரி. இதன் பொருள், நமது செயல்களின் எதிர் விளைவுகள் அல்லது பின் விளைவுகளே நமக்கு நிகழும் தீயவையும், நன்மைகளும் ஆகும்.
நாம் பிறருக்கு நன்மை செய்தால் நமக்கு நல்லது நடக்கும்;
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
முற்பகலில் பிறருக்கு தீங்கு செய்தால், பிற்பகலில் நமக்கு தீங்கு விளையும்.
பிறர் செய்வதால் நமக்கு தீதும், நன்றும் நிகழ்வன போலத் தோன்றும்; ஆனால், சற்று சிந்தித்துப் பார்த்தால், உண்மை விளங்கும்.
இந்த புறநானூற்றுப் பாடலை, முடிந்தால் முழுதாக ஒருமுறை படித்துப் பாருங்கள்; அதிகமில்லை, இன்னும் சில வரிகள்தான். ஆனால், இந்தப் பாடலின் பொருளை நாம் முழுமையாகப் புரிந்து கொண்டால், நாம் வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் புரிந்தவர்கள் ஆகிவிடுவோம்; எப்படி வாழவேண்டும் என்பதையும் புரிந்தவர்கள் ஆகி விடுவோம். அவ்வளவு ஆழ்ந்த பொருள் பொதிந்தது இந்தப் பாடல். என் பள்ளிப் பருவத்திலேயே இதனைப் படித்துப் புரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி நான் எப்போதும் மகிழ்வதுண்டு.