2. நீலகேசி கூறும் நோயின் வகைகள்
அ) இரண்டு ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answers
Explanation:
நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்றாகும். சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. இந்நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது.[1]
இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப்பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது. இப்பகுதிகளின் பெயர்களையும், அவற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம்
ஆ) மூன்று
Explanation:
நீலகேசி கூறும் நோயின் மூன்று வகைகள் அறிவாயாக. மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு. நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள்.