India Languages, asked by sanjiv123gandhi, 6 months ago


2.உங்கள் இல்லத்திற்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற
விவரித்து எழுதுக.​

Answers

Answered by jishnurajan2007
11

Answer:

முன்னுரை :

வந்த விருந்தினரைப் பேணிப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவனை வானவர்கள் போற்றும் சிறப்பு விருந்தினனாவான் . வந்த விருந்தையும் வரும் விருந்தையும் சிறப்புடன் செய்வது இல்லத்தார் கடமையாகும்.

இனிது வரவேற்றல் :

வீட்டிற்குவந்த உறவினர்களிடம் வாருங்கள், அமருங்கள், நலமா? நீர் அருந்துங்கள், குடும்பத்தினர் அனைவரும் நலமா? என சில வார்த்தைகளைக் கூறி முகமலர்ச்சியுடன் விருந்தினரை வரவேற்றேன்.

 

உணவு உபசரிப்பு :

• வீட்டிற்கு வந்த விருந்தினருக்கு அவர்கள் விரும்பும் அறுசுவை உணவைத் தயார் செய்து அவரை உணவு உண்ண வருமாறு இன்முகத்துடன் அழைத்து, அமர வைத்தேன்.

தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது மரபு. ஆகவே தமிழ்ப் பண்பாடு மறையாதிருக்க தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவிட்டேன்.

உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும், வலப்பக்கம் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்தேன்.

வாழை இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளை வைத்தேன்.

வாழை இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்தேன்.

உண்பவர் மனமறிந்து அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை மீண்டும் மீண்டும் பரிவுடன் பரிமாறினேன்.

அன்பு வெளிப்பாடு :

ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்தேன். அதைக் கொண்டு அவர் அருகில் வைக்கப்பட்ட வெற்றுப்பாத்திரத்தில் அவர் கைகழுவுமாறு நீர் ஊற்றினேன்.

பிறகு கைகளைத் துடைப்பதற்குத் துண்டினை அளித்தேன்.

உணவு உண்டு எழுந்தவருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.

உணவுண்டவரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து, வீட்டில் உள்ள

உணவுப் பொருட்கள் சிலவற்றையும் கொடுத்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுக்குமாறு கூறி, ஏழடி வரை அவருடன் சென்று வழியனுப்பிவைத்தேன்.

முடிவுரை:

விருந்தினர் பேணுதல் தமிழர் மரபு ஆகும். அதனை அன்போடும் அருளோடும் செய்தல் நனிசிறப்பாகும்.

Explanation:

is it helpful

Similar questions