2.சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக
Answers
Answer:
எல்லாப் பறவைகளுமே அழகானவை. மனிதகுலத்திற்குப் பலவிதங்களில் நன்மை செளிணிபவை. சிட்டுக்குருவியும் அதில் அடக்கம். எனினும் நமக்குச் சிட்டுக்குருவிகள் ஏனைய பறவைகளைவிட கொஞ்சம் உசத்திதான். சிறு வயதிலிருந்து நம் வீட்டினருகிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவை சிட்டுக்குருவிகள். அவை சிறகடித்துப் பறப்பதையும், தத்தித்தத்திச் செல்வதையும், கூடு கட்ட இடம் தேடுவதையும், தானியங்களைக் கொத்திக்கொத்திச் சாப்பிடுவதையும், இரண்டு குருவிகள் சண்டையிடும்போது தங்கள் கால்களைப் பிணைத்துக்கொண்டு படபடவெனச் சிறகடித்துக் கீழே விழுவதையும் கண்டிருப்போம்.
நமது வீட்டில் கூடு கட்டி இருந்தால் குஞ்சுகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு காலையில் நாம் கண் விழித்திருப்போம். இப்படி நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த
சிட்டுக்குருவி சில பகுதிகளில் இருந்து காணாமல் போனது. இவை திடீரென ஒரே நாளில், இருந்த இடத்தைக் காலி செய்துவிட்டுப் போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறைந்து, பின்பு முற்றிலுமாக அற்றுப்போயின. முக்கியமாக நகரங்களின்
சில பகுதிகளில். இவை ஏன் குறைந்து போயின என்பதைக் கண்டறிவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பின்னரே தெளிவான காரணத்தை அறிந்துகொள்ள முடியும். ஓர் உயிரினம் குறைந்து போய்விட்டது என எப்போது சொல்ல முடியும்? பல காலமாக, அறிவியல்பூர்வமாகக் கணக்கெடுப்பு நடத்தி, முன்னொரு காலத்தில் எத்தனை இருந்தது, தற்போது அந்த எண்ணிக்கையில் குறைந்துபோளிணிவிட்டது என்று சொல்ல முடியும். ஆனால், நம் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவி தென்படவில்லையெனில், அந்தப் பகுதியிலிருந்தே அது முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று சொல்லிவிடமுடியாது. நாமாக ஒரு காரணத்தை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதும் கூடாது.
Mark me as brainliest ☺️
Answer:
ஹவுஸ் குருவிகள் மக்களுடனும் அவர்களின் கட்டிடங்களுடனும் நெருக்கமாக தொடர்புடையவை. நகரங்கள், நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் பண்ணைகளில் (குறிப்பாக கால்நடைகளைச் சுற்றி) அவற்றைத் தேடுங்கள். நீங்கள் அவற்றை விரிவான வனப்பகுதிகள், காடுகள் அல்லது புல்வெளிகளில் காணலாம். பாலைவனங்கள் அல்லது வடக்கே போன்ற தீவிர சூழல்களில், ஹவுஸ் குருவிகள் மக்கள் அருகிலேயே மட்டுமே வாழ்கின்றன. ஹவுஸ் குருவிகள் பெரும்பாலும் தானியங்கள் மற்றும் விதைகள், அத்துடன் கால்நடை தீவனம் மற்றும் நகரங்களில், அப்புறப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுகின்றன. அவர்கள் உண்ணும் பயிர்களில் சோளம், ஓட்ஸ், கோதுமை, சோளம் ஆகியவை அடங்கும். காட்டு உணவுகளில் ராக்வீட், கிராப் கிராஸ் மற்றும் பிற புல் மற்றும் பக்வீட் ஆகியவை அடங்கும். ஹவுஸ் குருவிகள் தினை, மிலோ மற்றும் சூரியகாந்தி விதைகள் உள்ளிட்ட பறவை விதைகளை உடனடியாக சாப்பிடுகின்றன. நகர்ப்புற பறவைகள் வணிக பறவை விதைகளை உடனடியாக சாப்பிடுகின்றன. கோடையில், ஹவுஸ் குருவிகள் பூச்சிகளை சாப்பிட்டு அவற்றின் குட்டிகளுக்கு உணவளிக்கின்றன. அவை பூச்சிகளை காற்றில் பிடிக்கின்றன, அவற்றைத் துள்ளுவதன் மூலம் அல்லது புல்வெளிகளைப் பின்தொடர்வதன் மூலம் அல்லது அந்தி நேரத்தில் விளக்குகளைப் பார்வையிடுவதன் மூலம்.