2) தமிழில் சிற்றிலக்கிய வகைகள் வகைப்படும். அ.55 3b). 72 9 ).84 ஈ).96
Answers
Answer:
தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கியம் என்பது கீழ்காணும் அடிப்படைகளைக் கொண்டுள்ளது.
சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.
அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)
பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.
இவ்வகையில் பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும்.[1] சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன. பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர் ஆகும். சமக்கிருதத்தில் பிரபந்தம் என்னும் சொல், "கட்டப்பட்டது" எனப் பொருள்படும்.
Explanation: